சென்னை-கோவை வந்தே பாரத் ரயில்.. தொடங்கி வைக்கும் பிரதமர்.. 3 ஸ்டேஷன்களில் மட்டுமே நிற்கும்! லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையை இன்று மாலை பிரதமர் மோடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து துவக்கி வைக்க உள்ளார். வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து 6 நாட்கள் இயங்கும் இந்த ரயில் 3 ஸ்டேன்களில் மட்டுமே நின்று செல்ல உள்ளார். அந்த ஸ்டேஷன்கள் என்னென்ன? மற்றும் ரயில் நேர கால அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவையை மேம்படுத்த வந்தே பாரத் திட்டம் துவங்கப்பட்டது. அதன்படி தற்போது நாட்டின் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

What are the 3 stoppage and timing for Chennai-Coimbatore Vande Bharat Express its will inagurates PM Modi

இந்நிலையில் தான் சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று பச்சைக்கொடி காட்டி தொடங்கி வைக்கிறார். சென்னை சென்ட்ரலில் இன்று மாலை நடக்கும் விழாவில் பிரதமர் மோடி இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

அதன்பிறகு சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் நாளை முதல் முறைப்படி இயங்க உள்ளது. இதன்மூலம் சென்னை-கோவை இடையேயான பயணத்தை பயணிகள் வெறும் 5 மணி நேரம் 50 நிமிடங்களில் மேற்கொள்ள முடியும். இந்நிலையில் தான் சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் நிலையத்தில் நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

What are the 3 stoppage and timing for Chennai-Coimbatore Vande Bharat Express its will inagurates PM Modi

ஜஸ்ட் 6 மணிநேரம் தான்.. சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் முன்பதிவு துவக்கம்! டிக்கெட் கட்டணம் எவ்வளவு?
இந்த ரயில் வாரத்தில் புதன்கிழமை தவிர பிற 6 நாட்கள் இயங்க உள்ளது. சென்னை -கோவை இடையே 3 ரயில் நிலையங்களில் இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்ல உள்ளது. தினமும் காலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 20644) காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும்.

இந்த கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் காலை 6.35 மணிக்கு திருப்பூரை அடையும். அங்கிருந்து 6.37 மணிக்கு புறப்பட்டு காலை 7.12 மணிக்கு ஈரோடு செல்லும். அங்கிருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு காலை 7.58 மணிக்கு சேலம் செல்லும். சேலத்தில் இருந்து 8 மணிக்கு புறபப்ட்டு காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடைய உள்ளது.

What are the 3 stoppage and timing for Chennai-Coimbatore Vande Bharat Express its will inagurates PM Modi

மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் மதியம் இரவு 8.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை அடையும். முன்னதாக இந்த ரயில் சேலத்துக்கு மாலை 5.48 மணிக்கு வந்து 5.50 மணிக்கு புறப்படும். ஈரோட்டுக்கு மாலை 6.32 மணிக்கு வந்து மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதைத்ததொடர்ந்து 7.13 மணிக்கு திருப்பூர் செல்லும் ரயில் அங்கிருந்து 7.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு கோவையை அடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+