எங்கள் குடும்பத்தை கீழ்த்தரமாக பேசிய அன்புச்செழியன்.. போலீசில் சசிகுமார் அளித்த பரபரப்பு புகார்
Recommended Video

சென்னை: கந்துவட்டிக்கு கடன் கொடுத்த அன்புச்செழியன் மீது இயக்குநரும், நடிகருமான சசிகுமார் போலீசில் புகார் அளித்திருந்தார். தனது அத்தை மகனும், தயாரிப்பு நிறுவனத்தை மேற்பார்வை பார்த்து வந்தவருமான அசோக் குமார் தற்கொலைக்கு அன்பு செழியனே காரணம் என்று அவர் கூறியிருந்தார்.
அந்த புகாரில் உள்ள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சசிகுமார், வளசரவாக்கம் காவல் நிலையத்தில், அன்பு செழியன் மீது புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
என்னுடைய அத்தை மகன் அசோக்குமார், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகரில் குடியிருந்துவருகிறார். என்னுடன் அசோக்குமார் இணை தயாரிப்பாளராக இருந்துவந்தார்.

தாரை தப்பட்டை பெரும் நஷ்டம்
நாங்கள் தற்போது, 'கொடிவீரன்' என்ற திரைப் படத்தை தயாரித்து வரும் 30ம் தேதி வெளியிடத் தயாராக இருந்தோம். எங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலம் 'தாரை தப்பட்டை' என்ற படத்தை வெளியிட்டோம். அதற்கு சென்னை தி.நகர், ராகவா சாலையில் வசிக்கும் பைனான்ஸியர் மதுரை அன்புச்செழியனிடம் கடனாகப் பணம் வாங்கியிருந்தோம். அதற்கான வட்டியையும் செலுத்தி வந்தோம். அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்பதால் நாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தோம். மேற்கண்ட சூழ்நிலையில் தற்போது கொடிவீரன் படத்தினை வெளியீடு செய்வதற்காக வேலை நடந்து கொண்டிருந்தது.

நெருக்கடி
ஆனால் அன்புச்செழியன் அவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தினை அசல் மற்றும் வட்டி, வட்டிக்கு வட்டி போட்டு ஒரு பெரும் தொகையினை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இல்லையென்றால் கொடி வீரன் படத்தை வெளியிட விட மாட்டேன் என்று கடுமையாக நெருக்கடி கொடுத்து வந்தார். நான் எனது அடுத்த படவேலையில் இருந்ததால் இணை தயாரிப்பாளர் என்ற முறையில் அசோக்குமார் மேற்கண்ட கடன் பிரச்னையைக் கையாண்டு வந்தார்.

குடும்பத்தை பற்றி கீழ்த்தரமாக பேசினார்
அன்புச்செழியன், என்னைப்பற்றியும், எங்கள் குடும்பத்தைப் பற்றியும் மிகவும் கீழ்தரமாகவும் அநாகரிகமாகவும் பேசுவதாகக் கூறி அசோக்குமார் வருத்தப்பட்டு வந்தார். நான் அதற்கு வருத்தப்பட வேண்டாம் என்று கூறிவந்தேன். இந்தநிலையில் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். அசோக்குமார் எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

சசிகுமார் வலியுறுத்தல்
கொடிவீரன் படத்தை வெளியிட விட மாட்டேன் என்றும் எங்கள் வீட்டுப் பெண்களைத் தூக்கிவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். கடந்த ஏழு வருடங்களாக வட்டிக்கு வட்டி என்று பணம் வாங்கி வந்தார் அன்புச்செழியன் என்று அசோக் குமார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, கந்துவட்டி கேட்டு மிரட்டியதோடு அசோக்குமாரை தற்கொலைக்குத் தூண்டிய அன்புச்செழியன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சசிகுமார் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications