"அந்த போன் கால்ஸ்".. சரமாரியாக கேள்வி கேட்ட ஸ்டாலின்.. உடனே உதயநிதி இறங்க.. கள்ளக்குறிச்சி கதறுதே
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் ( மெத்தனால் ) குடித்து 39 பேர் மரணமடைந்த விவகாரம் திமுக அரசுக்கு தலைவலியைக் கொடுத்துள்ளது. இது பற்றி அமைச்சர்களிடம் சரமாரி கேள்விகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளாராம். தலைமை செயலகத்தில் நடந்த மீட்டிங்கில் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார்.
அமைச்சர்கள் துரைமுருகன், எவ வேலு, உதயநிதி, மா.சு, மற்றும் தலைமைச்செயலாளர், உள்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டவர்களோடு அவசர ஆலோசனை நடத்தினார் ஸ்டாலின். சம்பவம் எப்படி நடந்தது என்பதை அமைச்சர்களும் அதிகாரிகளும் விரிவாக முதல்வருக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

விரிவான விளக்கம்: குறிப்பாக, மாவட்ட சட்ட ஒழுங்கு பிரிவும், கலால் பிரிவும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களிடம் மாத மாமூல் வசூலித்து வந்த விபரங்களை பற்றியும் கூறியுள்ளனர். அதைக்கேட்டு, எ.வ வேலுவிடம் இது எப்படி உங்களுக்குத் தெரியாமல் நடந்தது ? என்று கடிந்து கொண்டுள்ளார் ஸ்டாலின். சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட அரசியல் தலைகள் சிலருக்கு கப்பம் கட்டப்பட்டு வந்துள்ளது.
ஆக்சன் : இதனாலேயே ஆக்சன் எடுப்பதில் தவறு நிகழ்ந்துள்ளது. ஆக்சன் எடுக்க முயற்சிக்கும் போதெல்லாம் அந்த அரசியல் தலைகள் கலெக்டருக்கும் எஸ்.பி.க்கும் ஃபோன் போட்டு தடுத்திருக்கிறார்கள் என்று முதல்வரிடம் சொல்லியிருக்கிறார்கள் அதிகாரிகள். இதைக்கேட்டு, சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தலையிட்டால் என்னிடம் சொல்லுங்கள் என பலமுறை சொல்லியிருக்கிறேன்.
வேகம் குறையும்: இதை ஏன் சொல்லவில்லை ? என்று அதிகாரிகள் மீதும் கோபம் காட்டியிருக்கிறார் ஸ்டாலின். பலியான குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவித்தால் பிரச்சனையின் வேகம் கட்டுப்படுத்தப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை உதயநிதி தலைமையில் அமைச்சர்கள் சென்று ஆறுதல் சொல்ல அனுப்பி வைக்கலாம் என்றும் ஆலோசித்தனர். கள்ளக்குறிச்சிக்கு உதயநிதி அனுப்பி வைக்கப்பட உள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து உள்ளது. இதில் ஏற்கனவே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஆக்சன்; இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 34 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் தெரிவிக்க மாண்புமிகு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மீண்டும் இன்று அவர்களுடன் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களும் கள்ளக்குறிச்சிக்குச் சென்றுள்ளார்.
இதுவரை இச்சம்பவத்தில் விஷச்சாராய விற்பனையில் தொடர்புடைய நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதில் தீவிர விசாரணை மேற்கொண்டு, குறிப்பாக விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications