நீலகிரியில் ஒரு மனித மிருகம்.. மனைவியை தாம்பத்தியத்துக்கு அழைத்து.. ஊட்டியில் பாவம் அந்த குழந்தை
ஊட்டி: தமிழ்நாட்டில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்தபடி உள்ளன.. ஒருபக்கம் பிள்ளைகளுக்கு கல்வியை போதிக்க வேண்டிய ஆசிரியர்களே, இதுபோன்ற புகார்களில் சிக்கி அதிர்ச்சியை தருகிறார்கள்.. மறுபக்கம், பெண்களே சில சமயம் போக்சோ சட்டத்தில் கைதாகி வருவது அதற்குமேல் கவலையை தந்து வருகிறது.. இதற்கு நடுவில் வேலியே பயிரை மேய்வது போல, பெற்ற தகப்பன்களே, தங்களது பெண் குழந்தைகளிடம அத்துமீறும் அசிங்கமான சம்பவங்களும் நடந்துவிடுகின்றன.. அப்படித்தான் நீலகிரி மாவட்டம் ஊட்டியிலும் ஒரு கன்றாவி சம்பவம் நடந்துள்ளது..
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த அந்த நபருக்கு தற்போது 50 வயதாகிறது.. கட்டிட தொழிலாளியாக உள்ளார்.. இவருக்கு திருமணமாகிவிட்டது.. ஆனால், கடந்த 20 வருடங்களாகவே, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

மனைவிக்கு 45 வயதாகிறது.. கணவர் கட்டிட தொழிலிலும், ஊட்டிலேயே காட்டேஜ் ஒன்றில் மனைவியும் வேலை பார்த்து வந்துள்ளனர்.
குடும்ப சூழல்
இந்த தம்பதிக்கு 2 மகள்கள், 2 மகன்கள் இருக்கிறார்கள்.. 2 மகன்கள் ஊட்டிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள்.. மூத்த மகளுக்கு 17 வயதாகிறது. இளைய மகளுக்கு சற்று மனநிலை பாதிப்பு உள்ளதாக தெரிகிறது.. குடும்ப சூழலுக்காக கணவன், மனைவி இருவருமே வேலைக்கு சென்றுவிடுவதால், மனநலம் பாதித்த 2வது மகளை கவனித்து கொள்ள யாருமில்லை.. எனவே, 17 வயது மகள், தன்னுடைய படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, தங்கையை வீட்டிலிருந்தே கவனித்து கொள்கிறார்.
இந்தநிலையில் காட்டேஜ்ஜில் வேலை பார்த்து வரும் மனைவிக்கு, அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது.. இதனால், சமீபகாலமாகவே, கணவன் தாம்பத்தியத்திற்கு அழைக்கும்போதெல்லாம் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளதாகவும் தெரிகிறது.
தாம்பத்யம் - மனைவி மறுப்பு
சம்பவத்தன்றும், கட்டிட தொழிலாளி, தாம்பத்தியத்திற்கு தன்னுடைய மனைவியை அழைத்துள்ளார்.. உடல்நிலையை காரணம் காட்டி, மீண்டும் மனைவி மறுப்பு கூறியிருக்கிறார்..
உடனே கட்டிட தொழிலாளி தன்னுடைய 17 வயது மகளிடம் சென்று, குளிர் என்னை வாட்டி வதைக்கிறது, ஊட்டி குளிரை தாங்க முடியவில்லை .. உன் அம்மாவுக்கும் வயதாகிவிட்டது என்பதால் தாம்பத்தியத்தக்கு வரமுடியவில்லை என்று சொல்லி மகளையே பாலியல் உறவுக்கு அழைத்திருக்கிறார்.
கதறி அழுத பெண்
இதை கேட்டு அதிர்ச்ச்சியடைந்த சிறுமி, அம்மாவிடம் சென்று, அப்பா இப்படியெல்லாம் தன்னிடம் பேசுகிறார் என்று சொல்லி கதறி அழுதுள்ளார்.. இதைக்கேட்டு நடுங்கிப்போன தாய், உடனடியாக ஊட்டி மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் தந்துவிட்டார்.. இந்த புகாரின்பேரில் ஊட்டி போலீசார், போக்சோ சட்டத்தில் கட்டிட தொழிலாளியை கைது செய்துள்ளனர்.
இதே நீலகிரியில் சமீபத்தில்கூட இப்படியொரு சம்பவம் நடந்தது.. குன்னூரை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு மனைவி, 2 பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.. குடிக்கு அடிமையான கணவனால், வெறுப்படைந்த மனைவி, வீட்டைவிட்டே போய்விட்டார்.
2 பெண் குழந்தைகள்
2 பெண் குழந்தைகளும் இருந்தால், கணவர் திருந்திவிடுவார் என்ற நம்பிக்கையில் அந்த பெண் வீட்டை விட்டு சென்றுவிட்டார். மூத்த பெண் 10ம் வகுப்பு படிக்கிறார்.. சம்பவத்தன்று பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.. எனவே 2வது மகள் மட்டும் அன்று பள்ளிக்கு சென்றுவிட்டார்.
பட்டப்பகலில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த அப்பா, முதல் மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. வெளியில் சொன்னால் தன்னுடைய 2வது மகளை கொன்றுவிடுவதாக மிரட்டியிருக்கிறார். தினமும் பாலியல் அட்டூழியத்துக்கு ஆளான அந்த சிறுமி கர்ப்பமானார்... உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதித்தபிறகுதான், இந்த கொடுமை வெளிச்சத்துக்கு வந்தது.
நீதிபதி அதிரடி தீர்ப்பு
பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்து போக்சோவில் கைதான தந்தைக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி லிங்கம் அதிரடியாக உத்தரவிட்டார்.. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசிடம் இருந்து ரூ.10 லட்சம் இழப்பீடு பெற்று தர மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்..
கூலி தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை பலதரப்பினரும் வரவேற்றிருந்தனர்.. இந்த தண்டனை ஆபாச அப்பாக்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்றும் நம்பப்பட்டது. அதற்குள் இன்னொரு கொடுமை ஊட்டியில் இப்படி நடந்துள்ளது..
அப்படியானால், உலகமறியா பிஞ்சுகளை காப்பாற்ற வேண்டுமானால், போக்சோ சட்டங்களை மேலும் கடுமையாக்குவதை தவிர வேறு வழியேயில்லை..!!












Click it and Unblock the Notifications