அவசர பிரிவில் கருணாநிதி.. காவிரி மருத்துவமனையில் நேற்று இரவு நடந்தது என்ன? - முழு விபரம்
திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்று இரவு உடல்நிலை மோசமானதை அடுத்து, காவிரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்று இரவு உடல்நிலை மோசமானதை அடுத்து, காவிரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதிகாலை 3.30 மணி வரை அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை நேற்று இரவும் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.
காவிரி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடலின் சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. .

நன்றாக இருந்தார்
நேற்று மாலையில் இருந்தே கருணாநிதியின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு கொண்டே இருந்தது. நேற்று அவருக்கு மொத்தம் 6 மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள். அதனால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால் அவரது பல்ஸ் 80க்கு 74 என்று நல்ல நிலையை அடைந்து இருக்கிறது.

வீட்டிற்கு சென்றார்
இந்த நிலையில், அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது என்றவுடன், கோபாலபுரம் இல்லத்தில் இருந்து, ஸ்டாலின் அவருடைய ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு சென்று இருக்கிறார். 10.15 மணி அளவில் அவர் வீட்டிற்கு கிளம்பி இருக்கிறார். காவிரி மருத்துவமனையில் இருந்து வந்த புதிய மருத்துவர்கள் அவரை கவனித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.

மோசமானது
இந்த நிலையில் கருணாநிதிக்கு மீண்டும் உடல்நிலை நேற்று இரவு 12.30க்கு மோசம் ஆகி இருக்கிறது. இதனால் வீட்டிற்கு சென்ற ஸ்டாலின் 10 நிமிடத்தில் மீண்டும் கோபாலபுரம் வந்து இருக்கிறார். வீட்டில் இருந்தபடியே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
|
காவிரி மருத்துவமனையில்
இதனால் நள்ளிரவு 1.12 மணிக்கு அவர் வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் காவிரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.முதல் முறையாக அவர் ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார். அவர், காவிரி மருத்துவமனையில் 4வது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் அனுமதிக்கப்பட்டார். 8 மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

தீவிரமான சிகிச்சை
இந்த நிலையில் மருத்துவமனையில் அவரது உடல்நிலை இன்னும் மோசமாகி இருக்கிறது. பின் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. 3.30 வரை அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது ரத்த அழுத்தத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. பல்ஸ்ஸும் பெரிய அளவில் குறைந்து இருக்கிறது. இதனால் தீவிரமாக அவருக்கு மருத்துவம் அளிக்கப்பட்டது.

மீண்டு வந்தார்
இந்த நிலையில் அவரது உடல் அதிகாலை 3.40 மணிக்கு கொஞ்சம் சரியாகி இருக்கிறது. உடலில் ரத்த ஓட்டம் அப்போதுதான் சரியாகி உள்ளது. இதனால் மீண்டும் அவர் உடல்நிலை சரியாக இருக்கிறது என்று காவிரி மருத்துவமனை தெரிவித்து இருக்கிறது. அவர் இப்போது தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications