கருணாஸுக்கு என்னாச்சு.. முந்தா நேத்து வரைக்கும் நல்லாதானே இருந்தாரு!
Recommended Video

சென்னை: நடிகர், முக்குலத்தோர் புலிப்படை தலைவர், திருவாடானை எம்எல்ஏ என பல பொறுப்புகளை சுமந்து நிற்கும் கருணாஸ் தற்போது திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது என்று வரும்போது நெஞ்சு வலியும் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் மிக மிக இயல்பானதே. அரசியல்வாதிகளையும், நெஞ்சு வலியையும் பிரிக்க முடியாது. சமீபத்தில்தான் ஜாமீன் கிடைத்து விடுதலையாகி வெளியே வந்தார் கருணாஸ். ஆனால் நேற்று திடீரென புதிய பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் கடந்த ஆண்டு நடந்த பூலித்தேவன் விழாவின்போது தாக்குதலில் ஈடுபட்டதாக வழக்குப் போடப்பட்டிருந்தது. அந்த வழக்கில் கருணாஸைக் கைது செய்ய நெல்லையிலிருந்து ஒரு போலீஸ் படை கிளம்பி சென்னைக்கு வந்தது.

திடீரென வந்த நெஞ்சு வலி
இந்த நிலையில்தான் கருணாஸுக்கு திடீரென நெஞ்சு வலி வந்து விட்டது. அதைத் தொடர்ந்து வடபழனி சூர்யா மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரியுள்ளனராம்.

முன்ஜாமீன் கிடைக்குமா
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று ஜாமீன் மனு விசாரணைக்கு வரவுள்ளது. முன்ஜாமீன் கிடைத்தால் கருணாஸுக்கு பிரச்சினை இல்லை. இல்லாவிட்டால் போலீஸார் அவரைக் கைது செய்யாமல் சென்னையை விட்டுக் கிளம்ப மாட்டார்கள் என்று தெரிகிறது.

நடவடிக்கை உறுதி
துணை முதல்வர் ஓ.பி.எஸ். கருணாஸ் மீதான செயல்பாடுகளை நேற்றுதான் விளக்கியிருந்தார். கருணாஸ் மட்டுமல்லாமல், அவரது செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவிப்போர் மீதும் நடவடிக்கை பாயும் என்று அவர் எச்சரித்திருந்தார். இந்த நிலையி்ல கருணாஸைக் கைது செய்ய நெல்லையிலிருந்து போலீஸார் கிளம்பி வந்துள்ளனர்.

எப்ப வந்தாலும் கைது உறுதி
கருணாஸுக்கு எப்போது நெஞ்சு வலி சரியாகும், எப்போது அவர் வீடு திரும்புவார் என்று தெரியவில்லை. ஆனால் எப்போது வெளியே வந்தாலும் எப்படியும் அவர் கைது செய்யப்படுவது உறுதி என்று சொல்கிறார்கள். கூவத்தூர் நாயகன் என்ற செல்லப் பெயரும் கருணாஸுக்கு உண்டு என்பதால் அவர் மீதான நடவடிக்கைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
கருணாஸுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக தலைவர் தினகரன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications