என் குழந்தை செப்டிக் டேங்கில் விழலை! கன்னம் வீங்கியிருக்கு, யூனிபார்மில் ரத்த கறை! பெற்றோர் கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

விக்கரவாண்டி: பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்ததாக சொல்லப்படும் குழந்தையின் கன்னத்தில் வீக்கம் இருப்பதாகவும் அவருடைய சீருடையில் ரத்தம் இருப்பதாகவும் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது குழந்தை பள்ளி செப்டிக் டேங்கில் விழுந்து இறந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து அந்த குழந்தையின் பெற்றோர் கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: லியா லட்சுமியின் யூனிபார்மில் தண்ணீரே இல்லை.

vikravandi crime

செப்டிக் டேங்கில் விழுந்திருந்தால் உடை எப்படி நனையாமல் இருக்கும்? ஒரு இடம் கூட நனையவில்லை. என் குழந்தையின் வலது கன்னத்தில் காயம் இருக்கிறது. கன்னம் வீங்கியுள்ளது. சீருடை, டை, ரிப்பனில் ரத்த கறை படிந்துள்ளது. என் குழந்தைக்கு எழுத தெரியும், படிக்கத் தெரியாது.

இதனால் குழந்தையை டீச்சர் அடித்துள்ளார். அதில்தான் என் குழந்தை இறந்துவிட்டது. ஆனால் இவர்கள் அதை மறைக்க குழந்தை செப்டிக் டேங்கில் விழுந்து இறந்துவிட்டதாக சொல்கிறார்கள். குழந்தையை மருத்துவமனைக்கு காரில் கொண்டு செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஆனால் அதில் நேரம் என்பதே இல்லாமல் உள்ளது. பள்ளிக்கு பக்கத்திலேயே மருத்துவமனை உள்ளது. எதற்காக இவர்கள் காரில் தூக்கிக் கொண்டு போனார்கள் என தெரியவில்லை. செப்டிக் டேங்கில் குழந்தையோட ஷூ இருந்ததாம், ஏதோ கம்பியை விட்டு குழந்தையை தூக்கினார்களாம். இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது.

என் குழந்தையை பின்பக்க வாசல் வழியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளார்கள். அந்த செப்டிக் டேங்கில் மாதக்கணக்கை கொண்ட குழந்தை விழுந்தாலே சிக்கிக் கொள்ளும். அத்தனை சிறிய ஓட்டை உள்ளது. அதில் எப்படி என் குழந்தை விழும். எப்போதும் என் மார்பிலேயே குழந்தை படுத்து தூங்குவாள்! சனிக்கிழமை என்றால் அப்பா வீட்டிலேயே இரு என்பாள்! இனி நாங்கள் என்ன செய்வது என கேட்டு பெற்றோர் கண்ணீர் விடுகிறார்கள்.

விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கும் இசேவை மையத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருபவர் பழனிவேல். இவரது மனைவி சிவசங்கரி. இவர்களுக்கு மூன்றரை வயதில் லியா லட்சுமி என்ற குழந்தை இருந்தார்.

இந்த குழந்தை விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். இவர் 3ஆம் தேதி பள்ளிக்குச் சென்றார். அவரை பழனிவேல்தான் பள்ளியில் விட்டுவிட்டு தனது வேலைக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் மதியம் 1.45 மணிக்கு சிறுமி சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறி ஆசிரியையிடம் சொன்னார். அவரும் சிறுமியை கழிப்பறைக்கு செல்ல அனுமதித்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் குழந்தை மீண்டும் வகுப்புக்கு வராததால், ஆசிரியைக்கு சந்தேகம் எழுந்து கழிப்பறையில் தேட சென்றார்.

அப்போது அங்கு இருந்த செப்டிக் டேங்க் மீது போடப்பட்டிருந்த துருப்பிடித்த இரும்பு மூடி உடைந்து காணப்பட்டதை கண்டார். உடனே பள்ளி ஓட்டுநர் கோபாலை அழைத்து செப்டிக் டேங்கில் தேட சொல்லியுள்ளனர்.

அப்போது அந்த செப்டிக் டேங்கில் சிறுமியின் ஷூ இருந்ததை கண்டறிந்தார். உடனே அங்கிருந்த கம்பியை எடுத்து குழந்தையின் ஆடையை பிடித்து இழுத்து மேலே தூக்கினார். பிறகு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ 4 லட்சம் நிவாரணமாக தமிழக அரசு வழங்கியது. அதை வாங்க பெற்றோர் மறுத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+