தீவிர கண்காணிப்பில் கருணாநிதி.. என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது?
திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக குழாயில் ஏற்பட்டு இருக்கும் நோய் தொற்றை குணப்படுத்த தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக குழாயில் ஏற்பட்டு இருக்கும் நோய் தொற்றை குணப்படுத்த தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இப்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். காவிரி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அவரது உடலின் சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவரது உடலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளதாக காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இந்த நிலையில் கருணாநிதிக்கு சிகிச்சை அளிப்பதற்காக காவிரி மருத்துவமனையில் இருந்து கூடுதலாக நான்கு மருத்துவர்கள் வந்து இருக்கிறார்கள்.
ஏற்கனவே இரண்டு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் புதிதாக வந்த மருத்துவர்கள் கூடுதல் மருத்துவ உபகரணம் கொண்டு வந்துள்ளனர். அவசர சிகிச்சை உதவி கருவிகளும் கொண்டு வந்துள்ளனர்.
அவருக்கு சிறுநீரக தொற்றால் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் அங்கு இருக்கும் 6 மருத்துவர்களில் 2 பேர், சிறுநீரக சிறப்பு மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுநீரகத்தில் ஏற்பட்டு இருக்கும் தொற்றை குணப்படுத்த அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை அவரது உடலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தற்போது காய்ச்சலை குணப்படுத்தவும் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications