அப்பவே அவ்ளோ அடிச்சிக்கிட்டாங்களே! வனிதாவின் 3வது கணவர் பீட்டர் திடீர் மரணம்! இதுதான் காரணமாம்! ஷாக்
சென்னை: நடிகை வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
நடிகை வனிதா ஏற்கனவே 2 திருமணங்கள் செய்து அதில் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில் கடந்த வருடங்களுக்கு முன் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
சரியாக சொல்ல வேண்டும் என்றால் 2020ல் இவர் பீட்டர் பால் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். தனக்கு என்று ஒரு வாழ்க்கை துணை வேண்டும் என்பதற்காக இவர் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
திருமணம்:பெரிய சர்ச்சைகளுக்கு இடையில் இந்த திருமணம் நடந்தது. சமூக வலைத்தளங்களில் இதை வைத்து தேவை இல்லாத விவாதங்கள் நடத்தப்பட்டது. நடிகை கஸ்தூரி போன்றவர்கள் இதில் கருத்துக்களை சொல்ல அது பெரிய சர்ச்சை ஆனது.

அதிலும் பீட்டர் பால் தன்னுடைய முதல் மனைவி எலிசபத்தை விவாகரத்து செய்யாமல் இவரை திருமணம் செய்தார். இதனால் எலிசபெத் போலீசில் புகார் அளித்தார். அப்போது இது பெரிய சர்ச்சையானது.
பீட்டர் பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாகவும். திடீரென தன்னை ஏமாற்றிவிட்டு வனிதாவை திருமணம் செய்து கொண்டதாகவும். தோளுக்கு மேல் பையன் இருக்கும் நேரத்தில் இப்படி இவர்கள் திருமணம் செய்து கொண்டது தவறு என்றும் எலிசபெத் புகார் அளித்தார்.
வனிதா இந்த புகார்களை எல்லாம் மறுத்தார். அதோடு பீட்டர் பால் குடிக்க மாட்டார். அவர் குடிப்பதை நிறுத்திவிட்டார் என்று கூறினார்.
இதற்கு பதில் சொன்ன எலிசபெத்.. இப்போது குடிக்க மாட்டார். ஆனால் போக போக அவரின் சுய ரூபம் தெரியும் என்று கூறினார்.
பிரிந்தனர்:அவர் சொன்னபடியே வனிதா பீட்டர் இடையில் மோதலும் வந்தது. வனிதா பீட்டர் இருவரும் கோவாவிற்கு ஹனி மூன் சென்ற போது அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கே பீட்டர் தினமும் குடித்துவிட்டு அலப்பறை செய்து இருக்கிறார்.
இதனால் இருவருக்கும் இடையில் மோதல் வந்துள்ளது. இந்த மோதல் உச்சம் எடுக்கவே.. பீட்டர் குடித்துவிட்டு வனிதாவிடம் மோசமாக நடந்து கொண்டு இருக்கிறார். அவரை மோசமாக திட்டி இருக்கிறார்.
இந்த சண்டை மோசமாகவே அவர்கள் இருவரும் அங்கேயே பிரிந்தனர். கோவா ஹோட்டலிலேயே பீட்டரை துரத்தி அடித்து உள்ளார் வனிதா.

இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள போது யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்குவதற்காக சந்தித்து உள்ளனர். இந்த சந்திப்பில் இவர்கள் இடையே காதல் ஏற்பட்டு உள்ளது.
சென்னையில் தொடங்கிய காதல் கல்யாணம் ஆகி கோவாவில் ஹனிமூனில் முடிந்துள்ளது.
மரணம்;இந்த நிலையில் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. குடிப்பழக்கம் காரணமாக இவருக்கு கல்லீரல், அல்சர் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளன. இந்த பிரச்சனைகளுக்கு அவர் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த வாரம் அவரின் உடல்நிலை மிக மோசமானது. இந்த நிலையில் பீட்டர் பால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
அவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்று எலிசபெத் பல முறை எச்சரித்த நிலையில் அந்த பழக்கம் காரணமாகவே பீட்டர் பால் மரணம் அடைந்து உள்ளார்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications