இன்னும் முகமே சரியாகல.. சாப்பிடவும் இல்லை.. திருச்செந்தூர் யானைக்கு என்ன ஆச்சு? இதுதான் ஒரே தீர்வு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் யானையை மற்ற யானைகளுடன் பழக விடுவதே சரியாக இருக்கும்.. சில நாட்களுக்கு அதை அதிக அளவில் யானைகளுடன் பழக விட்டால் மட்டுமே யானையின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக மாறும் என யானை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்தே திருச்செந்தூர் கோயில் யானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்புவது குறித்து ஆலோசனை செய்துள்ளனர். யானை தெய்வானையை திருச்சி, முதுமலை, டாப்ஸ்லிப் ஆகிய 3 யானைகள் மறுவாழ்வு மற்றும் புத்தாக்க பயிற்சி மையத்திற்கு அனுப்புவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அந்த யானை இன்னும் வருத்தத்திலேயே உள்ளது. இன்னும் முகமே சரியாகல.. சாப்பிடவும் இல்லை.

காட்டில் யானைகளுடன் யானைகளாக இருந்தால்.. அல்லது பயிற்சி மையத்தில் யானைகளுடன் யானைகளாக இருந்தால் எந்த சிக்கலும் இல்லை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அதன் மனம் மாறும் என்பதால்.. யானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்புவது குறித்து கோயில் நிர்வாகமும் வனத்துறையும் ஆலோசனை செய்து வருகிறது.
வனத்துறை உயர்மட்ட அதிகாரி, அறநிலையத்துறை உயர்மட்ட அதிகாரி முடிவு செய்த பின் புத்தாக்க முகாமிற்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அங்கே ஒரு மாதம் செலவு செய்யப்படும். அங்கேயே புது பாகனை பயிற்சிக்கு கொண்டு வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தகவல்கள் வருகின்றன.
யானை கொலை: திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முழுக்க இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று மாலை திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை தாக்கியதில் பாகன் உதயன், அவரது உறவினர் சிசுபாலன் பலியாகி உள்ளனர். இருவரும் யானைக்கு பழங்கள் கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆக்ரோஷத்துடன் தாக்கியுள்ளது. பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பலியாகி உள்ளனர்.
நடந்தது என்ன?: திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானையுடன் பாகனின் உறவினர் சிசுபாலன் நீண்ட நேரம் செல்பி எடுத்துவிட்டு யானையை தொட்டுள்ளார். புதிதாக ஒருவர் தன்னை தொடுவது பிடிக்காததால் தெய்வானை யானை அவரை கால் மற்றும் தும்பிக்கையால் தாக்கியுள்ளது.
அவரை காப்பாற்ற வந்த யானைப் பாகன் உதயகுமாரையும் தாக்கியுள்ளது. பின் அவர் தனது பாகன் என்பதை உணர்ந்து அவரை எழுப்ப முயன்றுள்ளது. அவர் எழுந்திரிக்காததால் மீண்டும் ஆத்திரத்தில் சிசு பாலனை கடுமையாக தாக்கியுள்ளது. அப்போதுதான் இந்த மரண சம்பவம் நடந்துள்ளது.
ஆய்வு: இதையடுத்து மாவட்ட வன அலுவலர் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அந்த யானையை ஆய்வு செய்தார். மாவட்ட வன அலுவலர் அளித்த பேட்டியில், பொதுவாக ஆண் யானைகளுக்குத்தான் மதம் பிடிக்கும். இது பெண் யானை, மதம் பிடிக்க வாய்ப்பு இல்லை. விலங்குகளின் மனநிலையை அறிய முடியாததால், அது தாக்குதல் நடத்தும் என்பதையும் யாராலும் கணிக்க முடியாது
கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. தற்போது யானை அமைதியாகவே உள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகு மேலதிக விபரங்களை தெரிவிக்கிறோம் ஆய்வுக்குப் பிறகு மாவட்ட வன அலுவலர் பேட்டி அளித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications