ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று மட்டும் என்ன செய்து விடுவீர்கள்?... தமிழக அரசுக்கு பா.ரஞ்சித் கேள்வி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டு மட்டும் என்ன செய்து விட போகிறீர்கள் என்று தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: கன்னியாகுமரில் மீனவர்கள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மட்டும் என்ன செய்ய போகிறீர்கள் என்று தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓகி புயலால் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க மத்திய- மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி மீனவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் கன்னியாகுமரியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றநர்.

அரசுகளின் மெத்தன போக்கை கண்டு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசை கண்டித்து இயக்குநர் பா.ரஞ்சித் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இன்னும் என்ன செய்ய போகிறது இந்த அரசு??கடலுக்குள் சென்று வீடு திரும்பாத என்னற்ற சகோதரர்களை எதிர்ப்பபார்த்து பெரும் வலி சுமந்து காத்திருக்கும் குடும்பத்தாரின் கண்ணீர் உங்களை ஒன்றுமே செய்யாதா!! #RKnagar தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் என்ன செய்துவிடுவீர்கள்??
— pa.ranjith (@beemji) December 9, 2017
அதில் அவர் கூறுகையில், இன்னும் என்ன செய்ய போகிறது இந்த அரசு?? கடலுக்குள் சென்று வீடு திரும்பாத எண்ணற்ற சகோதரர்களை எதிர்பார்த்து பெரும் வலி சுமந்து காத்திருக்கும் குடும்பத்தாரின் கண்ணீர் உங்களை ஒன்றுமே செய்யாதா!! #RKnagar தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் என்ன செய்துவிடுவீர்கள்?? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications