அப்படியேதான் இருக்கிறார் விஜயகாந்த்... மீனவர், மின்சாரப் பிரச்சினை குறித்து ஆளுநரிடம் பேசினாராம்!
சென்னை: தமிழக ஆளுநர் ரோசய்யாவை இன்று சந்தித்த தேமுதிக கம் எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த், தமிழக சட்டம் ஒழுங்குப் பிரச்சினை குறித்தும், அதிமுகவினர் வன்முறை குறித்தும், ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பது உள்பட படு சூடான கோரிக்கைகளை வைத்திருப்பார் என்று பார்த்தால் மீனவர் பிரச்சினை குறித்தும், மின்சாரப் பிரச்சினை குறித்தும் பேசியதாக ராஜ்பவனை விட்டு வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசி விட்டுப் போனார்.
காதுல, ஒட்டை பெரிதாக இருந்தால் பெரிய கம்மல் மலையையே சொருகி விட்டுப் போடுவார்கள் நமது அரசியல்வாதிகள். அந்த மாதிரியாகத்தான் இருந்தது விஜயகாந்த்தின் இந்தப் பேட்டி.

ஜெயலலிதா சிறைக்குப் போய் விட்ட நிலையில் விஜயகாந்த் படு தைரியமாக இன்று வீட்டை விட்டு வெளியேறி ஆளுநர் ரோசய்யாவை இன்று காலை ராஜ்பவனுக்குப் போய்ச் சந்தித்தார். அடடே, கேப்டன் வெளியே வந்து விட்டாரே என்று ஆச்சரியப்பட்டுப் போன செய்தியாளர்களும் ராஜ்பவனுக்கு ஓடி வந்து காத்திருந்தனர்.
இந்த சந்திப்பின்போது அதிமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும், அதிமுகவினரின் அராஜக வன்முறையைத் தடுக்க வேண்டும், சட்டம் ஒழுங்கைச் சீரமைக்க வேண்டும் என்று சூடான விஷயங்கள் குறித்து நிறையப் பேசியிருப்பார் என்று செய்தியாளர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
விஜயகாந்த்தும், ஆளுநரைப் பார்த்து விட்டு தனது எம்.எல்.ஏக்களுடன் வெளியே வந்தார். அவரிடம் என்ன பேசினீர்கள், என்ன கோரிக்கை வைத்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க கவர்னரிடம் வலியுறுத்தினேன். அவரும் ஆவண செய்வதாக உறுதியளித்தார்.
தமிழகத்தில் விவசாயிகள், மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சனை மற்றும் மின்சார பிரச்சனை குறித்து கவர்னரிடம் ஆலோசனை நடத்தியதாக விஜயகாந்த் தெரிவித்தார்.
இதைக் கேட்டு செய்தியாளர்களுக்கு சப்பென்று போய் விட்டது..
பேஸ்புக் குசும்பர்கள் என்னெல்லாம் எழுதப் போறாங்களோ...!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications