நீண்ட நாள் கழித்த கருணாநிதியை சந்தித்த குஷ்பு… பேசியது என்ன?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு விழா ஒன்றில் சந்தித்து பேசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓராண்டுகளுக்குப் பின்னர் கருணாநிதியை சந்தித்த குஷ்பு அவரிடம் ஆசி பெற்றுள்ளார்.
சினிமாவிலும் சின்னத்திரையிலும் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்த நடிகை குஷ்பு கடந்த 2010ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். திமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார்.

குறுகிய காலத்தில் அக்கட்சியின் முன்னணி பிரசார பிரமுகராக வலம் வந்த குஷ்பு, 2011 சட்டசபை தேர்தல், 2014 லோக்சபா தேர்தல்களில் தமிழகம் முழுவதும் திமுகவிற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்? என்பது பற்றி தனது கருத்தை சுதந்திரமாக வெளியிட்டதில் பொருளாளர் மு.க. ஸ்டாலினுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அத்தோடு, வீடு மீது தாக்குதல், செருப்பு வீச்சு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால் குஷ்பு மனவேதனை அடைந்தார்.
மனக்கசப்பு இருந்தாலும் திமுகவில் நீடித்தார். கலைஞர் டிவியில் சீரியல். அக்கட்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திமுகவில் இருந்து திடீரென விலகினார். அரசியலில் ஈடுபடாமல் சீரியல் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தினார்.
கலைஞர் டிவி சீரியலில் இருந்தும் விலகிய குஷ்பு காங்கிரஸ் கட்சியில் குஷ்பு இணைந்து கொண்டார். அதன்பிறகு கருணாநிதியை சந்திக்கவேயில்லை. இந்நிலையில், வைரமுத்து எழுதிய சிறுகதைகள் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் கமல்ஹாசன், நடிகை குஷ்பு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, கருணாநிதியை, குஷ்பு சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர். மேலும், கருணாநிதியின் உடல் நலம் குறித்து குஷ்பு அக்கறையுடன் கேட்டறிந்தார். திமுகவில் இருந்து விலகி ஓராண்டுகளுக்கு மேல் கருணாநிதியை சந்திக்காமல் இருந்த குஷ்பு தற்போது விழா ஒன்றில் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தாலும் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவேன் என்று கூறியிருந்தார். ஆனால், கருணாநிதியை சந்திக்கவே இல்லை குஷ்பு. இந்தநிலையில் கருணாநிதியிடம் ஆசி பெற்றுள்ளார் குஷ்பு.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications