அடுத்த 5 நாட்கள் நிம்மதி.. வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்.. குஷியில் தமிழ்நாடு மக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலைக்கு வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்தியா முழுக்க கடந்த 10 நாட்களாக கடுமையான வெப்பநிலை நிலவி வந்தது. வெளியில் செல்ல முடியாத அளவிற்கு கடுமையான வானிலை நிலவி வந்தது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.

ஈரோடு, சேலம், நாமக்கல்லில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு அதிகமாக வெப்பம் பதிவானது. ஈரோட்டில் நேற்று 100.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

What will be the weather for next 5 days in Tamil Nadu?

சேலத்தில் 100.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. அதேபோல் நாமக்கல்லில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேலத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் திடீரென உயர்ந்தது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெப்பம் 93 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவானது. வேலூரில் 97 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவானது. ஈரோடு, நாமக்கல்லில் 99 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. வரும் நாட்களில் இந்த பகுதிகளில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட வெப்பநிலை என்பது கடந்த 10 நாட்களாக சராசரியாக பதிவான வெப்பநிலை ஆகும். சென்னையிலும் 100 டிகிரி பாரன்ஹீட் வரை தொடர்ந்து பதிவானது.

What will be the weather for next 5 days in Tamil Nadu?

வெப்பநிலை:இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கமும் இருந்தது. வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை பல இடங்களில் உயர்ந்தது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயர்ந்தன.

வெப்ப காற்று காரணமாக வெப்பநிலை பல மாநிலங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் தொட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. கடந்த 4 நாட்களாக வெப்ப காற்றும் வடமாநிலங்களில் வீசி வருகிறது வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் 35.9 டிகிரி செல்ஸியஸ் முதல் 37.78 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருக்கிறது . பல மாநிலங்களில் வெப்ப அனல் காற்று வீச தொடங்கி உள்ளது.

குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானாவில் வெப்பநிலை மிக அதிகமாக பதிவாகி இருக்கிறது. மத்திய இந்தியாவில் ஏப்ரல் மாதம் சராசரியாக 37.78 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. வடமேற்கு இந்தியாவில் 35.9 டிகிரி செல்ஸியஸ் பதிவாகி உள்ளது.:

இது சராசரி அளவை விட 3.35 டிகிரி செல்சியாஸ் அதிகம் ஆகும். மும்பையில் தார் பாலைவனத்தில் இருப்பதை விட அதிக வெப்பநிலை பதிவானது. அங்கே 40 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.

What will be the weather for next 5 days in Tamil Nadu?

மழை:இந்த நிலையில்தான் நேற்று தென்னிந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சென்னையில் பல்வேறு ஏரியாக்களில் 1-2 மணி நேரம் சாரல் மழை பெய்தது.

இந்த நிலையில், 5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலைக்கு வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அடுத்த 3-5 நாட்களில் தென் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழ்நாட்டு பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும். சில இடங்களில் நீண்ட நேரம் மழை பெய்யும்.

இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை காற்று இருக்காது.

தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும். தமிழ்நாடு, கேரளாவின் சில பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+