ஏற்காடு தனித் தொகுதி இடைத் தேர்தல்... பாமக என்ன செய்யப் போகிறது?

ஏற்காடு தொகுதியில், சட்டசபை உறுப்பினராக இருந்த பெருமாள் மரணமடைந்ததைத் தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ம்தேதி அங்கு இடைத் தேர்தல் நடைபெறும்.
அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலில் முதல் நபராக திமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. திமுக வேட்பாளர் நேர்காணலையும் அக்கட்சி முதல் ஆளாக அறிவித்துள்ளது. அத்தோடு நில்லாமல், திமுகவுக்கு ஆதரவு கேட்டு கட்சித் தலைவர் கருணாநிதி பகிரங்கமாக கடிதமும் வெளியிட்டுள்ளார்.
ஆளுங்கட்சியான அதிமுக எப்படியும் நமக்கே வெற்றி என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது. மற்ற கட்சிகளின் நிலைப்பாடு இன்னும் தெளிவாகவில்லை. திமுகவுக்கு ஆதரவு தர மாட்டோம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறி விட்டன.
தற்போது பாமகவின் நிலைப்பாடு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு ஆதரவு தர மாட்டோம் என்று ஏற்கனவே டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். எனவே திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக என எதற்குமே அக்கட்சி ஆதரவு தராது என்று நம்பலாம்.
அக்கட்சி போட்டியிடுமா அல்லது வேறு யாருக்கு ஆதரவு என்பதும் தெரியவில்லை. தனது செல்வாக்கை உரசிப் பாக்க இந்த ஏற்காட்டை களமாக எடுத்துக் கொள்ள பாமக முயலும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. ஆனால் அதை எப்படி அது செய்யப் போகிறது என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications