8 மாதங்களில் ரிட்டையர்ட், மகள் கல்லூரி மாணவி..! 'வாட்ஸ் அப்' போலீஸ் அதிகாரி பற்றிய பின்னணி!
சென்னை: பெண் போலீஸ் ஒருவருடன் உதவி கமிஷனர் பேசிய கிளு கிளு பேச்சு வாட்ஸ்அப் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,
குறிப்பிட்ட அந்த உதவி கமிஷனரும், பெண் காவலரும் அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் பணியாற்றும் பெண் போலீசை தனது வலையில் வீழ்த்த கிளுகிளுப்புடன் உதவி கமிஷனர் பேசும் வசனங்கள் வாட்ஸ்அப் ஆடியோவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 குழந்தைகளுக்கு தாயான, அந்த கான்ஸ்டபிளிடம், போனில் ஒன்னு கொடுக்கட்டுமா... தனியா போகலாமா என்பது போல ஆபாசமாக பேசியுள்ளார் அந்த உதவி போலீஸ் கமிஷனர்.
வாட்ஸ் அப்பில் தீயாக பரவி வரும் உதவி கமிஷனரின் ஆபாச உரையாடல்கள் சென்னை முதல் அமெரிக்கா வரை வாட்ஸ்அப் பயன்படுத்தும் தமிழர்கள் பெரும்பாலானோர் செல்போன்களுக்கும் கடல் கடந்து சென்று விட்டது.

உதவி கமிஷனரின் இந்த ஆபாச பேச்சு குறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து வட சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் ரவிக்குமார், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இதன் முடிவில் சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
ஆபாச உரையாடலில் சிக்கி இருக்கும் உதவி கமிஷனர் 1987ம் ஆண்டு நேரடி சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் வேலூர். திருவல்லிக்கேணி, ஜாம்பஜார் போலீஸ் நிலையங்களில் இவர் இன்ஸ்பெக்டராகவும் பணிபுரிந்துள்ளார். சி.பி.சி.ஐ.டி.யிலும் வேலை செய்துள்ளார். தற்போது உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வருகிறார்.
இன்னும் 8 மாதத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். மகன் பல் டாக்டருக்கும், மகள் இன்ஜினீயரிங்கும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். திருமண வயதை எட்டியிருக்கும் மகளுக்கு திருமண நிச்சயார்த்தமும் நடந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மகள் படிப்பை முடித்ததும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந் நிலையில்தான் வயதான காலத்தில் உதவி கமிஷனர் வசமாக சிக்கிக் கொண்டிருக்கிறார்.
துறை ரீதியான நடவடிக்கைகள் தீவிரமாகி இருப்பதால் உதவி கமிஷனர் மீதான பிடி இறுகியுள்ளது. இதற்கிடையே சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பது பற்றியும் உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதனால் உதவி கமிஷனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தை பெண்கள் அமைப்பினர் கையில் எடுத்து விட்டால், நிலைமை மோசமாகிவிடும் என்று போலீஸ் அதிகாரிகள் கருதுகிறார்கள்.
இதனிடையே நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த உதவி கமிஷனர் மாலை வரை எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை. அதன்பிறகு வீடு திரும்பிய அவர் திடீரென, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெண் போலீஸ் உடனடியாக சைதாப்பேட்டை நீதிமன்ற பணிக்கு மாற்றப்பட்டார்.
சிவசேனா கட்சியின் சென்னை மண்டல பொதுச் செயலாளர் தயாளன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: கடந்த இரண்டு நாட்களாக செல்போன் வாட்ஸ்அப்பில் சென்னை நகர காவல்துறையில் பணி செய்யும் உதவி கமிஷனர், பெண் காவலர் ஒருவரிடம் வாட்ஸ்அப்பில் பேசிய காதல் ரசம் சொட்டும் உரையாடல் கேட்போர் அனைவருக்கும் காவல்துறை மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது.
மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறையே காம இச்சைக்கு அடிமையாகலாமா? வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது. இவரால், இதுவரை எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை விசாரித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவகாரம் பெரிதானதால், விரைவில் அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications