மோடியை பார்த்து 'மரண வியாபாரி' என்று சோ அழைத்தது எப்போது தெரியுமா?
தனது நண்பரான மோடியை பார்த்து சோ ஒருமுறை மரண வியாபாரி என அழைத்திருந்தார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கும்.
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் 'மரண வியாபாரி' என விமர்சனம் செய்திருந்தது எல்லோருக்கும் தெரியும். குஜராத் கலவரத்தில் சிறுபான்மையினர் கொல்லப்பட்டதை மனதில் வைத்து எதிர்க்கட்சிகள் ஒரு கட்டத்தில் இந்த பிரசாரத்தை உச்சமாக்கியிருந்தன.
அதேநேரம், மோடியின் நெருக்கமான நண்பரான சோவும், மோடியை அவ்வாறு ஒரு சந்தர்ப்பத்தில் கூறி அழைத்தார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், சோ அவ்வாறு கூறிய வீடியோவை மோடியே தனது டிவிட்டர் கணக்கில் போட்டுள்ளார்.

அது துக்ளக் பத்திரிகையின் 38வது ஆண்டு விழா சமயம். அப்போது மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார் சோ. வரவேற்புரையாற்றிய சோ, மோடி ஒரு மரண வியாபாரி என கூறினார். அனைவருக்கும் ஷாக். ஆனால், அதன்பிறகு அவர் கூறிய வரிகள்தான், சோ ஒரு அரசியல் நகைச்சுவையாளர் என்பதை மீண்டும் நிரூபித்தது.
The feisty Cho Ramaswamy introduces me as the 'Merchant of Death.' Do watch this memorable interaction. https://t.co/2FsF64sVvH
— Narendra Modi (@narendramodi) December 7, 2016
"மோடி மரண வியாபாரிதான்.. ஆனால் தீவிரவாதம், ஊழல், வேண்டியோருக்கு சலுகையளிப்பது, அதிகாரிகளின் திறமையற்ற நிலை, மெத்தனம், ஏழ்மை, புறக்கணிப்பு, இருள் உள்ளிட்டவற்றுக்கு.." என சோ கூறி முடித்தபோது கை தட்டல் அடங்க வெகு நேரமானது.
இந்த வீடியோவைதான் மோடி ஷேர் செய்து தனது நண்பருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications