அந்த 500 ரூவா நோட்டு தமிழ் நாட்டுக்கு எப்போ வரும்?
சென்னை: பண ஒழிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்ட இரண்டே நாட்களில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துவிடும் என மத்திய அரசு அறிவித்தாலும், இரண்டு வாரங்களான பிறகும் கூட 500 ரூபாய் நோட்டு வந்தபாடில்லை.
இன்று நாட்டில் சிலவும் பணத் தட்டுப்பாடு, சில்லறைப் பிரச்சினை அனைத்துக்குமே முக்கிய காரணம், புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வராததுதான். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் புதிய 500 ரூபாய் நோட்டுக்களே வரவில்லை.

மும்பை, டெல்லி போன்ற சில பகுதிகளில் மட்டும் சில ஏடிஎம்களில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்ததாகக் கூறப்பட்டது. அதுவும் சில நாட்களுக்குத்தான்.
இந்த நிலையில் புதிய ரூ.500 நோட்டுகள் ஓரிரு நாட்களில் தமிழகத்தில் புழக்கத்துக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்துக்கு ரூ.1,500 கோடி மதிப்பிலான புதிய ரூ.500 நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ரிசர்வ் வங்கியின் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பணம் சென்னை ரிசர்வ் வங்கியை வந்தடைந்துள்ளதாகவும், அவை வங்கிக் கிளைகளுக்கு பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications