ஜெ. இருந்த போது நாங்கள் பூஜ்யம்.. அவரே அனைத்தையும் பார்த்துக்கொண்டார்.. அமைச்சர் ஓபன் டாக்!
ஜெயலலிதா இருந்த போது நாங்கள் ஜீரோவாக இருந்தோம் என அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா இருந்த போது நாங்கள் பூஜ்ஜியமாக மட்டுமே இருந்தோம் என அமைச்சர் சிவி சண்முகம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா தான் அனைத்தையும் பார்த்துக்கொண்டார் நாங்கள் ஜீரோவாக தான் இருந்தோம் என்றும் சிவி சண்முகம் கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக சசிகலா கோஷ்டியினர் தேர்தல் ஆணையத்தில் இன்று கூடுதலாக 68,976 பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது வரும் காலங்களில் கூடுதல் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும் என அவர் கூறினார். தமிழக அரசு யாருக்கும் பயப்படாது என்று கூறிய அவர், தமிழக அரசு எப்போது ஜெயலலிதாக அரசாகவே செயல்படும் என்றார்.

மத்திய அரசு திரும்பப்பெறும்
ஜல்லிக்கட்டு பிரச்சினையை போல் மாட்டிறைச்சி விவகாரத்தையும் தமிழக அரசு சிறப்பாக கையாளும் எனவும் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மாட்டிறைச்சி தடை சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய அரசிடம் தெரிவிப்போம்
மேலும் மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசின் கருத்துகளை மத்திய அரசிடம் தெரிவிப்போம் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். திமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்றும் சிவி சண்முகம் தெரிவித்தார்.

ஓபிஎஸி உண்மை முகம்
இரு அணிகள் இணைய நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என கூறிய அவர் பொதுச்செயலாளர் பதவியை விட்டுக்கொடுத்தால் தான் பேச்சுவார்த்தை என செம்மலை தெரிவித்திருக்கிறார். அவரது இந்த கருத்து பன்னீர்செல்வம் அணியின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.

நாங்கள் பூஜ்யமாக இருந்தோம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர்கள் நாங்கள் அனைவரும் பூஜ்யமகா தான் இருந்தோம் என்றும் அவர் கூறினார். ஜெயலலிதா தான் அனைத்தையும் பார்த்துக்கொண்டார் என்றும் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications