நேற்று பொய் .. இன்று பல்டி.. சிறைபிடித்த எம்.எல்.ஏக்கள் எங்கே? "பிபி"யிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி!
சென்னை: சென்னை விடுதியில்தான் எம்.எல்.ஏக்கள் இருப்பதாக தவறான தகவலை தாம் உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்ததாக அரசு வழக்கறிஞர் இன்று அந்தர்பல்டி அடித்தார். இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எங்கே? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசு வழக்கறிஞரிடம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பது தொடர்பாக பாமக வழக்கறிஞர் பாலு, டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கின் விசாரணையின் போது எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் விடுதியில்தான் இருக்கிறார்கள் என அரசு வழக்கறிஞர் அப்பட்டமான பொய்யை கூறியிருந்தார்.

சிறைவைப்பு
அதே நேரத்தில் சென்னை- புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்கள், கைதிகளாக சிறை வைக்கப்பட்டிருப்பது ஊடகங்களில் அம்பலமானது. மேலும் அங்கு 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் உணவை சாப்பிடாமல் போராட்டம் நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஜாமர் மூலம் செயலிழப்பு
அங்கு சிறை வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்கள், செல்போன்களை பயன்படுத்த முடியாத வகையில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் எம்.எல்.ஏக்களின் குடும்பத்தினரும் பரிதவித்து வருகின்றனர். இதனிடையே இன்று இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிடி செல்வம், மதிவாணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது.

தவறான தகவல்
அப்போது, எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், எம்.எல்.ஏக்கள் விடுதியில்தான் இருக்கிறார்கள் என நீதிமன்றத்தில் தாம் தவறான தகவலை தெரிவித்ததாக கூறினார். இதை நீதிபதிகள் பதிவு செய்தனர்.

எங்கே எம்.எல்.ஏக்கள்?
மேலும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எங்கே இருக்கிறார்கள்? என்பது உள்ளிட்ட சரமாரி கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். இது குறித்து விரிவான விளக்கத்தை திங்கள்கிழமை தர வேண்டும் என்று அரசுக்கும் காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications