ஆமா பாஜகவுல காவிரி குழு போட்டாங்களே... எங்கப்பா அந்த தலைவரையே காணோம்?
காவிரி பிரச்சனையை சுமூகமாக தீர்க்க பாஜக அமைத்த குழுவின் தலைவர் இல. கணேசன் எங்கே என கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: காவிரி பிரச்சனையை சுமூகமாக தீர்க்க தமிழக பாஜக இல. கணேசன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. ஆனால் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காத நிலையில் அந்த குழுவின் தலைவரைத் தேடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியமோ, மேற்பார்வை குழுவோ வந்தே தீரும்; அமைத்தே தீருவோம் என ஜம்பம் பேசியது பாஜக. இதில் மிகப் பெரிய காமெடியாக காவிரி பிரச்சனையை 'சுமூகமாக தீர்க்க' இல. கணேசன் எம்.பி. தலைமையில் ஒரு குழுவை அமைத்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

கருப்பு முருகானந்தம், பொன். விஜயராகவன் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். இவர்களும் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண டெல்லிக்குப் போனார்கள்.
காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனையை சுமூகமாக தீர்க்க தமிழக பாஜக சார்பில் 3 பேர் கொண்ட குழு பாஜக மூத்த தலைவர் திரு. இல.கணேசன் எம்.பி. அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. pic.twitter.com/KPBC26ZACU
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) March 26, 2018
அங்கே மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பம்மியே பேசினர். மேலாண்மை வாரியம் அமையும்..ஆனால் எப்பவென தெரியாது எனவும் தடாலடியாக பேட்டி கொடுத்தார் இல. கணேசன்.
இப்போது மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழக பாஜகவின் காவிரி குழுவுக்கான தலைவர் இல.கணேசன் நேற்று முதல் எங்கே இருக்கிறார்? என்றே தெரியவில்லை.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
விஜய் கொஞ்சம் அட்ரஸை மாற்றி அனுப்பி இருந்தால்.. பிரச்சனை சரி ஆகி இருக்கும்! மேகதாது கேசில் சொதப்பல் -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு












Click it and Unblock the Notifications