ரவுடிகளாக மாறி பார்ட்டிக்கு போன போலீஸ்.... இப்படியும் கூட சீக்ரெட் ஒப்பந்தம் இருக்குமோ?
சென்னை அருகே ரவுடிகள் கைது தற்செயலாக நடந்த ஒன்றில்லை என்றும், பினுவுடன் இணைந்து போலீசார் திட்டமிட்ட ஒரு ரகசிய ஆப்ரேஷன் இது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன
Recommended Video

சென்னை: பூந்தமல்லி அருகே 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் அதிரடியாக கைது செய்த விவகாரத்தில் பினுவுக்கு தொடர்பிருப்பதாகவும், இந்த கைது பினுவுடன் உடன்பாடு செய்து போலீசார் நடத்திய ரகசிய ஆப்ரேஷன் என்று செய்திகள் வெளியாகியுள்ளன
பூந்தமல்லி அருகே உள்ள மலையம்பாக்கம் பண்ணை வீட்டில் ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரவுடிகள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி வருகிறது. இதில் முக்கியமானதாக கருதப்படுவது இதுவரை இல்லாத அளவு அனைத்து ரவுடிகளும் ஓரே இடத்தில் கைது செய்யப்பட்டது தான்.
சென்னையில் ரவுடிகள் அட்டகாசம் தலைதூக்கி வந்த நிலையில் ஒரே நேரத்தில் பல ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மட்டுமல்ல தப்பியோடிய எஞ்சிய ரவுடிகளும் இந்த கைதை ஆச்சர்யமாக தான் பார்க்கிறார்கள்

எப்படி சிக்கினோம்
இதற்கு முன்பு இந்த மாதிரியான ரவுடிகள் பங்கேற்கும் பல பார்ட்டிகள் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. இதில் ஏராளமான ரவுடிகள் ஒன்று சேர்ந்து கொண்டாடிக்கொண்டு குடித்து விட்டு கும்மாளம் போட்டுக்கொண்டு தான் வருகிறார்கள். இவ்வாறு இருக்கையில் இந்த முறை மட்டும் எங்கு பிசுரு தட்டியது என்பதுதான் கைதாகாமல் எஸ்கேப் ஆனா மற்ற ரவுடிகளின் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரே கேள்வியாக உள்ளதாம்.

இது போலீஸ் அப்ரேஷன் தானா...?
ரவுடிகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அல்லது அவர்களின் மற்ற கொண்டாட்டங்கள் நடக்கும் இடம், நேரம், நாள் என அனைத்தும் ரகசியம் காக்கப்படுவது வழக்கம். ஆனால் அப்படியில்லாமல் பள்ளிக்கரணையில் பிடித்த இளைஞர்களை வைத்து பினுவின் கொண்டாட்டத்தை போலீசார் மோப்பம் பிடித்து, அதற்குள் பெரிய டீமை ஆஜர் செய்தது, எப்படி ரவுடிகளை கைது செய்தது என்று அனைத்து சினிமா பாணியை விட வேகமாக நடந்துள்ளது தான் எப்படி என்று தெரியாமல் பல ரவுடிகள் குழம்பிக்கொண்டிருக்கின்றனர்

போலீசாருக்கு உதவி இளைஞர்கள்
இந்த கேள்விகளுக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபடும் போது, பல ரவுடிகளை மலையம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தான் பிடித்து கொடுத்துள்ளனர். அவர்களுக்கு போலீஸ் ஆப்ரேஷன் பற்றி எப்படி தெரிந்தது. ஆயுதம் வைத்திருக்கு ரவுடிகளை கண்டு பயப்படாமல் எப்படி இளைஞர்கள் அவர்களை பிடித்தனர் என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கு முக்கிய காரணம் போலீசார் முன்பே, இந்த இளைஞர்களுக்கு தகவல் அளித்து உதவியை நாடியது தான். அதனால் இது திட்டமிட்ட ஒரு ஆப்ரேஷன் தான் என்றும் கருதப்படுகிறது.

போலீசாருக்கு உதவிய பினு?
பினுவை மிரட்டி போலீசார் பல நாட்களுக்கு முன்பே திட்டமிட்ட ஒரு ஆப்ரேஷன் இது என்றும், இதில் மற்ற ரவுடிகளை பினு வேண்டுமென்ற அழைத்து சிக்க வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பினு வேறு வழியில்லாமலும் தன்னை காப்பாற்றிக்கொள்ளவும் தான் இந்த உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

மாறுவேடத்தில் காக்கிகள்
ரவுடிகள் கலந்துக்கொண்ட பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பல காக்கிகள் ரவுடிகள் கெட்டப்பில் உடன் இருந்ததும், அவர்கள் அளித்த தகவலை தொடர்ந்தே இந்த ஆபரேஷன் சரியாக முடிந்ததாகவும் கூறப்படுகிறது. மாறுவேடத்தில் இருந்த போலீசார் தான் பினுவை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது

எங்கே ரவுடி பினு
தற்போது பினு எங்கே என்பது குறித்து போலீசார் எந்த தகவலை வெளியிடாத நிலையில், இதர ரவுடிகளிடமிருந்து பினுவை காப்பாற்ற அவனை வேறு எங்காவது போலீசார் பதுக்கி வைத்திருப்பார்கள் அல்லது வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைத்திருப்பார்கள் என்றே கருதப்படுகிறது. ரவுடிகள் கைது குறித்து போலீசாரே செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் வரை, இவ்வாறான பல கேள்விகளும், வியூகங்களும், வதந்திகளும், உண்மைகளும் பரவிக்கொண்டே இருக்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications