Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதே ரூட்.. கிட்டத்தட்ட அதே டைம்! சென்னை டூ கோவை.. வந்தே பாரத் vs சதாப்தி.. எது பெஸ்ட்! முழு ஒப்பீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று சென்னை கோவை வந்தே பாரத் ரயில் சேவையைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஏற்கனவே இந்த ரூட்டில் சதாப்தி ரயில் இயங்கி வரும் நிலையில், அதை வந்தே பாரத் ரயிலுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

இன்று தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். இதற்காக நகர் முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் பிரதமர் மோடி பெரிதும் எதிர்பார்க்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையையும் ஆரம்பித்து வைக்கிறார். வந்தே பாரத் என்பது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலாகும். முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயில், தானியங்கி கதவுகள், அதிவேக வைஃபை உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டுள்ளது.

 Which is best for you Vande Bharat Express vs Shatabdi Express in Chennai to Coimbatore route

சென்னை கோவை வந்தே பாரத்: வரும் காலங்களில் நாட்டில் மேலும் பல வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் இருக்கும் நிலையில், இரண்டாவது ரயிலாக சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுவரை இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களில் 16 பேட்டிகள் இருந்த நிலையில், சென்னை கோவை வந்தே பாரத் ரயிலில் 8 பேட்டிகள் மட்டுமே இருக்கும். சோதனை ஓட்டத்தில் அது திட்டமிட்ட நேரத்தைக் காட்டிலும் 22 நிமிடங்கள் முன்னதாகவே கோவை வந்தடைந்தது. காலையில் கோவையில் இருந்து சென்னைக்கும் மாலை சென்னையில் இருந்து கோவைக்கும் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

சதாப்தியுடன் ஒரு ஒப்பீடு: ஏற்கனவே, இப்போது சென்னை கோவை இடையே முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட சதாப்தி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இது காலை சென்னையில் இருந்து கோவைக்கும் மாலை கோவையில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படுகிறது. அது சரி இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம். எதில் கட்டணம் குறைவு? எது பெஸ்ட்? வேகம், செயல்திறன் மற்றும் வசதி என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

 Which is best for you Vande Bharat Express vs Shatabdi Express in Chennai to Coimbatore route

வேகம் எப்படி: வந்தே பாரத் எக்ஸ்பிரஸை சதாப்தி எக்ஸ்பிரஸுடன் ஒப்பிடும் போது வேகம் மற்றும் செயல்திறன் முக்கியமானது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், அதிகபட்சம் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது. இது இந்தியாவின் அதிவேக ரயில்களில் ஒன்றாகும். சதாப்தி எக்ஸ்பிரஸ் மணிக்கு 130-140 கி.மீ வரை செல்லக் கூடியது. அதேநேரம் சதாப்தி எக்ஸ்பிரஸ் உடன் ஒப்பிடும்போது, ​​வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வேகமாக டாப் ஸ்பீடை எட்டும் ஆற்றல் கொண்டது.

சதாப்தி எக்ஸ்பிரஸ் 96.43% சரியான நேரத்தில் வந்துள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் புதிய ரயில் என்ற போதிலும், அது சதாப்தி எக்ஸ்பிரசை காட்டிலும் துல்லியமாக வந்து செல்கிறது. இரண்டு ரயில்களிலும் இருக்கும் அனைத்து பெட்டிகளும் குளிரூட்டப்பட்டவை.. chair cars and executive class என்று இரு வகையான பெட்டிகள் இருக்கிறது. இருப்பினும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் தானியங்கி கதவுகள், சிசிடிவி கேமராக்கள் இருக்கிறது. அவையெல்லாம் சதாப்தி எக்ஸ்பிரஸில் மிஸ்ஸிங்..

வசதிகள் என்னென்ன: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸில் பயணிகள் பல்வேறு வசதிகளைப் பெறலாம். வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் வைஃபை, ஜிபிஎஸ், தானியங்கி கதவுகள், எல்இடி விளக்குகள், பயோ கழிப்பறைகள் ( bio-vacuum toilet), இடத்திற்கு வரும் உணவு எனப் பல வசதிகள் உள்ளன. சைவம் மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்படும். அதேநேரம் சதாப்தி எஸ்க்பிரஸில் அனைத்து ரயில்களிலும் வைபை இல்லை. குறிப்பிட்ட சில வழித்தடங்களில் இயங்கும் சதாப்தி எஸ்க்பிரஸ்களில் மட்டுமே வைஃபை இருக்கிறது.

கட்டணம்: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் ரூட், வகுப்பு பொறுத்து மாறுபடும். இந்த ரூட்டில் சென்னை டூ கோவை செல்ல வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் கட்டணம் 1365 ரூபாய் ஆகும். அதேநேரம் சதாப்தி எக்ஸ்பிரஸில் டிக்கெட் இருப்பதைப் பொறுத்து கட்டணம் மாறுபடும். அதாவது குறைந்த அளவு டிக்கெட் மட்டுமே இருந்தால், விலை ஏறும். பொதுவாக 1095 ரூபாய் முதல் 1370 ரூபாய் வரை இது இருக்கும்.

அதாவது சென்னை டூ கோவை ரூட்டில் வந்தே பாரத்தில் நீங்கள் எப்போது டிக்கெட் எடுத்தாலும் ஒரு விலை தான். நாளைய பயணத்திற்கு எடுத்தாலும், 2 மாதம் கழித்துச் செல்லும் பயணத்திற்கு எடுத்தாலும் ஒரே ரேட் தான். ஆனால், சதாப்தி ரயிலில் அப்படி இல்லை. முன்கூட்டியே அதிக டிக்கெட் இருக்கும் போது புக் செய்தால் சற்று குறைந்த விலையில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நேரம்: வேகம், செயல்திறன் ஆகியவற்றை பொறுத்தவரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகியவை இந்தியாவின் டாப் ரயில்களாக உள்ளன. சென்னையில் இருந்து கோவை செல்ல வந்தே பாரத் ரயிலில் 5.50 மணி நேரம் ஆகும். அதேநேரம் சதாப்தி ரயலில் செல்ல 7.05 மணி நேரம் ஆகும். அதாவது வந்தே பாரத் ரயிலில் சுமார் 1.10 மணி நேரம் முன்கூட்டியே செல்ல முடியும்.

 Which is best for you Vande Bharat Express vs Shatabdi Express in Chennai to Coimbatore route

எது பெஸ்ட்: அதேநேரம் வந்தே பாரத் ரயில் சேலம், ஈரோடு திருப்பூரில் மட்டுமே நின்று செல்லும். மறுபுறம் சதாப்தி ரயிலை பொறுத்தவரை காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூரில் நின்று செல்லும். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது சென்னையில் இருந்து கோவை செல்ல இரண்டும் சிறந்தது என்றாலும் வந்தே பாரத் சற்று பெஸ்டாக இருக்கிறது. அதேநேரம் காட்பாடி, ஜோலார்பேட்டையில் வந்தே பாரத் நிற்காது என்பதால் அங்குச் செல்பவர்களுக்கு சதாப்தி தான் ஒரே ஆப்ஷன்.

வந்தே பாரத் காலையில் கோவை டூ சென்னையும் மாலையில் சென்னை டூ கோவையும் இயங்குகிறது. சதாப்தி காலையில் சென்னை டூ கோவையும் மாலையில் கோவை டூ சென்னையும் இயங்குகிறது. அதேபோல இதே வழித்தடத்தில் காலை மற்றும் மாலை என்று இரண்டு நேரத்திலும் இன்டர்சிட்டி விரைவு ரயிலும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+