Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இயேசு".. மெயின் கருணாநிதி.. எங்க வீட்டு பெண்ணுக்கு உரிமைதொகை தகுதி நிர்ணயிக்க நீ யார்? சீறிய சீமான்

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு கருணாநிதி செய்த நன்மை என்ன என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிஷப்புகள் சர்ச்களுக்கு செல்வதில்லை.. கருணாநிதி வீட்டில்தான் குடியிருக்கிறார்கள். அந்த இடத்தை விட்டு அவர்கள் நகர்வதே கிடையாது.. ஜமாத்துகளும் அப்படித் தான். கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கருணாநிதி செய்த ஏதாவது ஒரே ஒரு நன்மையை சொல்லுங்க பார்ப்போம் என்று நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சீமானை பொறுத்தவரை, வெற்றி தோல்வி பற்றியெல்லாம் கவலைப்படாமல், எந்த ஒரு தேர்தலையும் புறக்கணிக்கவும் செய்யாமல், அதேசமயம் யாருடனும் கூட்டணிக்கும் இணங்காமல், "சிங்கிள் சிங்கமாக" களமாடி வருவது பலராலும் கவனிக்கப்பட்டு வரும் விஷயம்..

தமிழ் தேசியத்தை முன்வைப்பது ஒருபக்கம், திராவிட அரசியல் மீதான கடுமையான விமர்சனத்தை முன்வைப்பது மறுபக்கம் என இரு துருவங்களில் அவரது அரசியல் விடாமல் பயணப்பட்டு வருகிறது..

சீமான்

சீமான்

10 வருட காலமாக அரசியல் களத்தில் நீடித்து வந்தாலும், இதுவரை நடந்த ஒரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றதில்லை.. அதேசமயம், பாஜகவின் பி டீம் என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் இருந்துவரும் சீமான், கடந்த ஈரோடு கிழக்கு தேர்தலின்போதுதான் தன்னுடைய பேச்சில் பாஜகவை பற்றியும், தன்னை அனைவரும் ஆர்எஸ்ஸின் கைக்கூலி, பாஜகவின் பி-டீம் என்று விமர்சிப்பது பற்றியும் வெளிப்படையாகவே பேசியிருந்தார்.. அதற்கான பதிலையும் தன்னுடைய பிரச்சாரத்தில் சொல்லியிருந்தார்.

 முஸ்லிம் வேஷம்

முஸ்லிம் வேஷம்

சீமான் அப்போது பேசும்போது, எப்ப பார்த்தாலும், "சீமானுக்கு போட்றாதே, பிஜேபி வந்துடும், சீமானுக்கு போட்றாதே, பிஜேபி வந்துடும்"-ன்னு ஒவ்வொரு முறையும் இவங்க சொல்லிட்டே இருக்காங்க.. பிஜேபிக்கு போடாதே என்று தைரியமாக சொல்ல முடியாத நீங்கள், சீமானுக்கு போட்டால் பிஜேபி வந்துடும் என்று சொல்வது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்? எனக்கு ஓட்டுப்போட்டால், நான்தானே வருவேன்? என் வீட்டில் ஸ்விட்ச் போட்டால், என் வீட்டிலதானே விளக்கு எரியும்? உன் வீட்லயா பல்ப் எரியும்? ஒரு குடையை உங்களால, கருப்பாக மோடிக்கு முன்னாடி பிடிக்க முடிந்ததா? எதிர்க்கட்சியாக இருந்தால் "கோ பேக்" என்பது, ஆளும் கட்சியாக இருந்தால் "வெல்கம்" என்பதா??" என்று கேள்வியும் எழுப்பியிருந்ததை பாஜக உள்ளிட்ட கட்சிகள் கவனிக்காமல் இல்லை.

 கிறிஸ்து ஏசு

கிறிஸ்து ஏசு

நேற்றைய தினமும், சிறுபான்மையினர் நலன்குறித்து சீமான் பேசியுள்ளார்.. சென்னை பல்லாவரம் அருகே பம்மல் பகுதியில், சிறுபான்மை மக்கள் நலக் கட்சியின் தலைமை அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்து வைத்தார்.. அப்போது சீமான் பேசியது இதுதான்: "கிறிஸ்தவர்கள் என்னோடு இல்லை, நான்தான் உங்களோடு இருக்கிறேன்.. என்னை விட்டால் உங்களுக்கு நாதி இல்லை. கிறிஸ்து ஏசு புரட்சி செய்ய வந்தேன் என்றார். இப்போது உங்களுக்கோ புரட்சி என்றால் என்னவென்றே தெரியாது.

ஏசுதாஸ்

ஏசுதாஸ்

கருணாநிதி ஒரு வாளி தண்ணீர், மற்றவர்கள் ஒரு வாளி என்று புரட்சி தீயை தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டனர். ஆர்எஸ்எஸ் கைக்கூலி, பிஜேபியின் பி டீ என்றெல்லாம் என்னை அவதூறு செய்தார்கள். ஆனால் சிறுபான்மை மக்கள் நல கட்சித் தலைவர் சாம் ஏசுதாஸ் என்னை முழுமையாக நம்பினார். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் பைபிளையும் குரானையும் ஊன்றி படிக்க வேண்டும்... அநீதிக்கு எதிராக நிற்க வேண்டும்.

 தொட்டால் தீட்டு

தொட்டால் தீட்டு

நீங்கள் சிறுபான்மை கிடையாது.. 13 கோடி இனத்தின் மக்கள் நீங்கள்.. சிறுபான்மை என்று சொல்வதை இனி ஏற்கவே கூடாது. நீங்கள் சிறுபான்மை என்றால், யார் பெரும்பான்மை? ஸ்டாலினா? உதயநிதியா? நேற்று இந்து, இன்று கிறிஸ்தவன், நாளை இஸ்லாமியன். மதம் மாறிக் கொள்ளக்கூடியது. ஆனால் நாம் தமிழர்கள். அது எப்போதும் மாறாதது. கட்சி பெயரை முதலில் மாற்றுங்கள், சிறுபான்மை என்ற சொல்லையே அப்புறப்படுத்துங்கள். பார்த்தால் தொட்டால் நின்றால் தீட்டு என்றதால் கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டோம். ஒரே நாடு என்கிறீர்களே, அப்படின்னா ஒரே சுடுகாட்டை முதலில் கொண்டு வாருங்கள்.

 ஜமாத்துக்கள்

ஜமாத்துக்கள்

கன்னடன், மலையாளி, தெலுங்கன் நம்மை ஆட்சி செய்து விட்டார்கள். இனி வட இந்தியன் ஆளப் போகிறான். நாம் என்ன செய்ய போகிறோம்? பிஷப்புகள் சர்ச்களுக்கு செல்வதில்லை.. கருணாநிதி வீட்டில்தான் குடியிருக்கிறார்கள். அந்த இடத்தை விட்டு நகர்வதே கிடையாது.. ஜமாத்துகளும் அப்படித் தான். கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கருணாநிதி செய்த ஏதாவது ஒரே ஒரு நன்மையை சொல்லுங்க பார்ப்போம்.. எங்கள் வீட்டு பெண்களுக்கு உரிமை தொகைக்கான தகுதியை நிர்ணயிக்க நீ யார்? தேர்தல் வாக்குறுதியில் தகுதி என்ற வார்த்தையே இல்லையே ஏன்?

நெடுஞ்செழியன்

நெடுஞ்செழியன்

நிதியமைச்சர் பிடிஆர் பேசும் தமிழைக் கேட்டு, நான் அப்படியே தூங்கிவிட்டேன்.. ஒன்று தமிழில் பேசுங்கள், இல்லாவிட்டால் ஆங்கிலத்தில் பேசுங்கள்... ஊழல், லஞ்சத்தில் சிக்காத ஒரு மனைவியுடன் வாழ்ந்த நெடுஞ்செழியனிடம் ஆட்சி போகாமல், எப்போது கருணாநிதியிடம் ஆட்சி போனதோ அன்னைக்கே நாம் தோற்றுவிட்டோம். ஸ்டாலின் முதலமைச்சராக இன்று உட்கார்ந்திருக்க காரணமே நான்தான்.. பிரசாந்த் கிஷோருக்கு அன்று கொடுத்த 400 கோடியை, எனக்கே கொடுத்திருக்கலாம்... 81 இடங்களில் என் வேட்பாளர்களால் நீங்கள் ஜெயித்தீர்கள்... அதுக்கெல்லாம் புள்ளிவிவரம் இருக்கிறது..

 தம்பிகள் சீமான்

தம்பிகள் சீமான்

மோடியையே தமிழ் பேச வைத்தவன் நான்தான்.. என்னால் தான் மோடி அடிக்கடி தமிழில் பேச முயன்று வருகிறார்... ஆனால், அவர்கள் தமிழ் பேசினாலும், நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொல்பவன் வெல்வான் என்றான் தலைவன், தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பதே கோட்பாடு. நாடாளுமன்றத் தேர்தலில் சென்னைக்கு 3 பெண் வேட்பாளர்கள் நாம் தமிழர் கட்சியில் தயாராக உள்ளனர்" என்றார் சீமான்... வழக்கம்போல், சீமானின் இந்த பேச்சையும், அவரது தம்பிகள் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.. இதற்கு உடன்பிறப்புகள் திரண்டு சென்று பதிலளித்து கொண்டிருக்கிறார்கள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+