தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் சஸ்பென்ட் செய்யப்பட்டதன் பின்னணி என்ன?- exclusive
தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் திடீரென சஸ்பென்ட் செய்யப்பட்டதற்கான பின்னணி விவரங்கள் கிடைத்துள்ளன.
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் திடீரென சஸ்பென்ட் செய்யப்பட்டதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் சங்க பொதுச்செயலர் விஷால் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆனந்த விகடன் வார இதழுக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த பேட்டிக்காக இத்தனை மாதங்களாக நடவடிக்கை எடுக்காத தயாரிப்பாளர் சங்கம் நேற்று திடீரென விஷால் சஸ்பென்ட் செய்யப்படுவதாக அறிவித்தது. இந்த திடீர் நடவடிக்கையின் பின்னணி குறித்து நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்துக்கு கிடைத்த தகவல்கள்:
விஷாலுக்கு நடிகர் சங்கத்தில் குடைச்சல் கொடுத்து வரும் வாராகி, தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருக்கிறார். விஷால் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் ஆகஸ்ட் மாதமே வாராகி வலியுறுத்தினாராம்.
ஆனாலும் அதைபற்றியெல்லாம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கண்டுகொள்ளாமலேயே இருந்துள்ளனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான ஆவணங்கள் வாராகி கைகளுக்கு கிடைத்தது.
விஷால் விமர்சித்து வரும் நிலையில் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை; இதோ உங்கள் ஊழல் ஆவணங்கள் இருக்கின்றன; நானும் பத்திரிகையாளர்களிடம் உங்கள் முறைகேடுகளை சொல்லுகிறேன் என வாராகி கூற அலறிப் போனதாம் தயாரிப்பாளர் சங்கத் தரப்பு. இதனால் வேறுவழியே இல்லாமல் அவசரமாக செயற்குழுவைக் கூட்டி விஷாலை சஸ்பென்ட் செய்வதாக அறிவித்திருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.
நடிகர் சங்கத்துடன் மல்லுக்கட்டி வரும் வாராகி விரைவில் தயாரிப்பாளர் சங்கத்துக்குள்ளும் குடைச்சல் குரலை எழுப்பக் கூடும் என்பதால் நிர்வாகிகள் கிலியில் உள்ளனராம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications