சென்னை கல்லூரி மாணவி அஸ்வினியை, அழகேசன் கொலை செய்தது ஏன்? பரபர தகவல்கள்
Recommended Video

சென்னை: சென்னையில் கல்லூரி வாசலில் வைத்து குத்தி கொலை செய்யப்பட்ட அஸ்வினி யார் அவருக்கும் அழகேசனுக்கும் இடையே என்ன பிரச்சினை என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் வைத்து அஸ்வினி என்ற அதே கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்த மாணவியை அழகேசன் கழுத்தையறுத்து கொலை செய்தார். இவரை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து கல்லூரியில் இருந்து மாணவிகள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். பத்திரிகையாளர்களை சம்பவ இடத்தின் அருகே வர வேண்டாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கொலை பின்னணி என்ன?
பொதுமக்கள் மத்தியில் நடந்த இந்த படுகொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அஸ்வினுக்கும், கொலையாளி அழகேசனுக்கும் நடுவே என்ன பிரச்சினை, கொலையின் பின்னணி என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

காதல் தொல்லை
அஸ்வினி மதுரவாயலை சேர்ந்தவர். அதே பகுதியை சேர்ந்த அழகேசன், தண்ணீர் கேன் பிசினஸ் செய்துள்ளார். அஸ்வினி கல்லூரி செல்லும்போதெல்லாம் பின்தொடர்ந்து காதலிப்பதாக கூறி தொல்லை செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அஸ்வினி, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். போலீசார், அழகேசனை கைது செய்திருந்தனர்.

ஜாமீனில் வந்து கொலை
அழகேசன் தொல்லையால் பாதிக்கப்பட்டு, மதுரவாயலை காலி செய்த அஸ்வினி, ஜாபர்கான்பேட்டையில் தங்கியிருந்து கல்லூரிக்கு வந்து படித்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த அழகேசன், பெரிய கத்தியொன்றை எடுத்து வந்து அஸ்வினியை குத்தி கொலை செய்துள்ளான்.

கலெக்டர் பேட்டி
இதனிடையே அஸ்வினி கொலை தொடர்பாக விசாரிக்க எழும்பூர் வட்டாட்சியருக்கு உத்தரவிடப்படுள்ளதாக சென்னை மாவட்ட கலெக்டர் அன்பு செல்வன் தெரிவித்தார். வட்டாட்சியர் அறிக்கை வந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கலெக்டர் தெரிவித்தார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications