விஜயபாஸ்கர் 'ஆசி'யுடன் சுகாதாரத்துறை கட்டுமான ஒப்பந்தங்களை பெற்ற சுப்பிரமணியம்!
சென்னை: தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் சுகாதாரத்துறை ஒப்பந்தங்களை ஏராளமாகப் பெற்றவர்தான் தற்கொலை செய்து கொண்ட நாமக்கல் ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம்.
வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரும் வருமான வரிச் சோதனையில் சிக்கியவருமான நாமக்கல் ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த மாதம் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அப்போது நாமக்கல் அருகே மோகனூரில் உள்ள சுப்பிரமணியம் வீட்டிலும் பலமணிநேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றினர்.
திருச்சி, சேலத்தைச் சேர்ந்த 8 அதிகாரிகளைக் கொண்ட குழுதான் இந்த சோதனையை நடத்தியது. இந்த நிலையில் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
தற்கொலை செய்த சுப்பிரமணியம், விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் அரசு கட்டிடங்களை கட்டும் ஒப்பந்தங்களைப் பெற்றிருந்தார். அத்துடன் தனிப்பட்ட முறையில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்வி நிறுவன கட்டிடங்களையும் கட்டியவர் இந்த சுப்பிரமணியம்.
விஜயபாஸ்கரின் மனைவி பெயரிலான நிறுவனங்களுக்கும் பின்புலமாக இருந்தவர் சுப்பிரமணியம். இவரது தற்கொலை தமிழக அரசியலில் பெரும் பிரளயத்தை கிளப்ப போகிறது.
-
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications