ஜெ. ஆட்சி நடத்துவதாக ஓ.பி.எஸ். கூறுவது சுப்ரீம்கோர்ட்டில் உறுதியளித்த நிபந்தனையை மீறுவதே: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஜெயலலிதாவே ஆட்சி நடத்துவதாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்டசபையில் வாக்குமூலம் கொடுத்திருப்பது உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கடைபிடிக்கிறோம் என்று உறுதியளித்த நிபந்தனையை மீறுவதாகும் என்று திமுக தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக ‘ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பது யார்? என்ற தலைப்பில் கருணாநிதி கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

Who is ruling Tamilnadu?, asks Karunanidhi

கேள்வி:- தமிழகத்தில் ஆட்சியை நடத்துவது ஜெயலலிதாவா? பன்னீர் செல்வமா?

கலைஞர்:- இந்தக் கேள்விக்கு நான் பதில் கூறுவதை விட, தமிழகச் சட்ட மன்றப் பேரவையில் 8-12-2014 அன்று கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முதலமைச்சர் பன்னீர் செல்வம் அளித்த பதிலிலேயே தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதாவது "மாண்புமிகு உறுப்பினர் திரு. சவுந்தரராசன் அவர்கள் தன்னுடைய உரையின் போது சட்டம், ஒழுங்கைப் பற்றிக் குறிப்பிட்டார். சட்டம் என்பது ஒழுங்கைக் கடைப்பிடிக்கின்ற ஆட்சியாளர்களின் பணி, முன்னேற்றம், நிர்வாகத் திறன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தான் மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இன்றைக்கு நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்" என்று பதிலளித் திருக்கிறார்.

அவர் பேசியதை வெளியிட்ட "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளேடு முதலமைச்சரின் பேச்சுக்கு குறிப்பிட்டுள்ள தலைப்பே, "It's Jaya who runs the Government, OPS tells Assembly" என்பதாகும். மேலும் அந்தச் செய்தியில், "AIADMK Chief J. Jayalalithaa may have been disqualified as an MLA, but Chief Minister O. Panneerselvam said in the Assembly on Monday that it was his party chief who was running the Government in the State. During his speech in the assembly, Panneerselvam made repeated references to Jayalalithaa as the people's chief minister, thereby making it clear and loud who is the boss. Panneerselvam said the government functioning under Jayalalithaa's leadership was a perfect example of a good administration" என்று திட்டவட்டமாக தற்போது நடைபெறும் ஆட்சியை ஜெயலலிதாதான் தற்போதும் நடத்திக் கொண்டிருக்கிறார் என்று பன்னீர்செல்வம் பேரவையிலே கூறியதை, உறுதிப்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கிய போது, தீர்ப்பில் நேரடியாக நிபந்தனைகளை விதிக்காத நிலையிலும், அங்கே ஜெயலலிதாவுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், நீதிமன்ற நடவடிக்கைகளையொட்டியும், நீதிபதிகளிடம் அவர் தெரிவித்த உத்தரவாதங்களையொட்டியும், நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை முறையாகக் காப்பாற்றிக் கொள்வது பற்றித் தெரிவிப்பதற்காக ஜெயலலிதாவைச் சந்திக்க நேரம் கேட்டுக் கிடைக்காததால், கடிதம் மூலமாகவே எட்டு நிபந்தனைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டுமென்று தெரிவித்தார்.

அந்த நிபந்தனைகளில் ஐந்தாவது நிபந்தனை என்ன தெரியுமா? "ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில்தான் தமிழக அரசு இயங்குகிறது என்கிற தோற்றத்தை உருவாக்கக்கூடாது" என்பது தான்! தோற்றத்தைக்கூட உருவாக்கக் கூடாது என்பது நிபந்தனை. ஆனால் தமிழகத்தில் தற்போதுள்ள முதலமைச்சர் பன்னீர்செல்வம் சட்டப் பேரவையிலேயே ஜெயலலிதாதான் இன்றைய ஆட்சியையே நடத்திக்கொண்டிருக்கிறார் என்று வாக்குமூலமே கொடுத்திருக்கிறார் என்றால், அதையும் "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேடும் உறுதிப்படுத்தியிருக்கிறது என்றால், தமிழகத்தில் யார் ஆட்சியை நடத்துவது என்ற சந்தேகம் வரலாமா? ஜாமீன் வழங்கிய நேரத்தில், ஜெயலலிதாவின் வழக்கறிஞரான நாரிமன் ஏற்றுக் கொண்ட நிபந்தனை மீறப்படுகிறதா அல்லவா? இதில் உள்ள அரசியல் சட்ட நெறிமுறைகள் பற்றி சட்ட வல்லுநர்கள்தான் சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+