யார் இந்த சசிகலா புஷ்பா?
சென்னை: சசிகலா புஷ்பா என்ற பெயர் கடந்த இரண்டு தினங்களாக ஊடகங்களில் பரபரப்பாக அடிபடுகிறது. தூத்துக்குடி மாவட்டம், முதலூரரை அடுத்த அடையல் கிராமத்தில் 1976ம் ஆண்டு பிறந்த சசிகலா புஷ்பா அதிமுகவில் இணைந்து குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்டவர்.
தூத்துக்குடி மாவட்ட அதிமுக மகளிர் அணிச் செயளாலர், தூத்துக்குடி நகர மேயர், மாநிலங்களவை உறுப்பினர் என கட்சிக்குள் இவரின் வளர்ச்சி வேகமாக இருந்து வந்தது.

இவர் தூத்துக்குடி மேயராக பதவி வகித்த போதே ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார், இதன் காரணமாக தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.பி ஆனார், மேலும் அதிமுகவின் ராஜ்யசபா கொறடாவாகவும் அறிவிக்கப்பட்டார் சசிகலா புஷ்பா. அதிமுகவில் எந்த அளவுக்கு இவரின் வளர்ச்சி இருந்ததோ அதே அளவுக்கு சர்ச்சைகளிலும் சிக்கி ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டார்.
• 1976ம் ஆண்டு பிறந்ச சசிகலா புஷ்பா, ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டமும், பொது நிரிவாகவியலில் முதுகலை பட்டம் மற்றும் பட்டயமும் பெற்றவர்.
•கிராமப்புற பெண்களுக்காக தொழிற்பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல் குறித்து ஊக்குவிப்புகளை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
•தமிழ்நாட்டுல் கிராமப்புற இளைஞர்களுக்காக இலவச ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு ஏற்பாடு செய்தவர்.
•அதிமுக மகளிர் அமைப்பின் இணை செயலாளராக 2009-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்னர் 2010ல் துணை செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
•2010ம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற உலக இளைஞர் மாநாட்டின் ஓர் உறுப்பினராக பங்கேற்றார்.
•2011ம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சியில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2013ம் ஆண்டு அதிமுக மகளிரணி செயலாளராக நியமிக்கப்பட்டார்.
•2013ல் தென்கொரிய அரசின் காலநிலை மாற்றம் பற்றிய உலக மேயர்கள் மாநாட்டில் ஓர் உறுப்பினராக கலந்துகொண்டார்.
•அதிமுக சார்பில் 2014ல் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார்.
•2014ம் ஆண்டில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதில் இருந்து தற்போதய மழைக்காக கூட்டத் தொடத் தொடர் வரை சசிகலா புஷ்பாவின் வருகைப் பதிவேடு சிறப்பாகவே இருக்கிறது. பெரும்பாலான கூட்டத்தொடரில் 100 சதவிகித வருகைப் பதிவேடு வைத்துள்ள சசிகலா புஷ்பா, 2014ம் ஆண்டு குளிர்கால கூட்டத் தொடரின் போது 91சதவிகிதம் அவைக்கு வந்து விவாதங்களில் பங்கேற்றுள்ளார். 2015ம் ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது 92% சதவிகிதம் அவை விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.
•கடந்த 2 ஆண்டுகளில் ராஜ்யசபாவில் நடைபெற்ற விவாதங்களில் பங்கேற்று 186 கேள்விகளை கேட்டுள்ளதாக கூறுகிறது ராஜ்யசபா புள்ளி விபரம்.
தற்போது திமுக ராஜ்யசபா உறுப்பினர் திருச்சி சிவாவுடன் ஏற்பட்ட கைகலப்பில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
•தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டை ராஜ்யசபாவில் முன்வைத்த சசிகலா. கட்சியின் தலைமை தன்னை பதவி விலக நிர்பந்திப்பதாகவும், எனினும் கட்சிக்கு என்றுமே விசுவாசத்துடன் இருப்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார் சசிகலா.
• 2020ஆம் ஆண்டு வரை தனக்கு பதவிக்காலம் உள்ளதால் மாநிலங்களவை உறுப்பினர் பதவிவை ராஜினாமா செய்யப்போவதில்லை என்று சசிகலா புஷ்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications