தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியா, அல்லது ஆளுநரா? கேட்கிறார் தினகரன்
தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியா, அல்லது ஆளுநரா? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை: கன்னியாகுமரியில் போராடும் மீனவ மக்களுக்கு மாநில முதல்வர் நேரில் சென்று ஆறுதல் சொல்வதற்கு பதிலாக, மாநில ஆளுநர் சென்று மீனவர்களை சந்திக்கிறார். தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியா, அல்லது ஆளுநரா? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் நேற்று தன் டிவிட்டர் பதிவில் கடுமையாக சாடியுள்ளார். தமிழக முதல்வர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஒகி புயலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து காப்பாற்றுவதில், தமிழக அரசு மெத்தனம் காட்டுவதால்தான், இரவான பின்னும், ஆயிரக்கணக்கான மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
|
வேதனையான நிலை
காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை என்ன என்பதிலேயே தமிழக அரசு தெளிவில்லாத ஒரு நிலையில் இருப்பது மிகுந்த வேதனையளிக்கும் ஒரு நிலை. மீனவர்களின் பிரச்சினையை தலையாய பணியாகக் கருதி, அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
|
ஒருங்கிணைந்த செயல்பாடு தேவை
மத்திய அரசோடு இணக்கமாக செயல்படுவதாக பெருமைபட்டுக் கொள்ளும் தமிழக அரசு, அவர்களோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு, காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க தாமதமில்லாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
|
ஆளுநரா முதல்வர்
மாநில முதல்வர் நேரில் சென்று, போராடும் மீனவ மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு பதிலாக, மாநில ஆளுநர் சென்று மீனவர்களை சந்திக்கிறார். தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியா, அல்லது ஆளுநரா?
|
நம்பிக்கையூட்டும் நடவடிக்கை
மீனவ மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு எடுக்காத காரணத்தால்தான் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.
|
உணர்வுகளோடு கலந்திருப்பேன்
நடந்த துயரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது என்பதை உணர்ந்ததால்தான், உடனடியாக குமரிக்கு சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொன்னேன். மீனவர்களின் இந்த துயரம் தீரும்வரை அவர்களது உணர்வுகளோடு நான் எப்போதும் கலந்திருப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications