தென்னை மரத்துக்கடியிலே.. "எல்லைமீறிய" மனைவி.. தெறித்தோடிய கணவர்.. ஆலங்குளம் பெண்ணால் திணறிய தென்காசி
தென்காசி: : ஆலங்குளம் அருகே அடிக்கடி செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த தம்பி அக்காவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது மாறாந்தை.. இங்கு வசித்து வருபவர்கள் மாரியப்பன் - லட்சுமி தம்பதிகள்.. இவர்களுக்கு சுபாவேணி என்ற மகளும், வேல்முருகன், மகேஸ்வரன், கவுதமன் ஆகிய 3 மகன்களும் இருக்கிறார்கள்.

காதல் திருமணம்: சுபாவேணிக்கு 21 வயதாகிறது.. இவர் தன்னுடைய அத்தை மகன் கருப்பசாமியை காதலித்து வந்த நிலையில், 3 வருடங்களுக்கு முன்பேயே அவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுருதிமாதவ் என்ற 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், சுபாவேணியின் நடவடிக்கையில் நிறைய மாறுதல்கள் தென்பட துவங்கியது.. கணவரின் உறவினர் ஒருவருடன் சுபாவேணி போனில் பேசி வந்துள்ளார்.. ஒருமுறை இதை கண்டுபிடித்துவிட்ட கருப்பசாமி, மனைவியை கண்டித்தார்.. தன்னுடைய உறவினருடன் போனில் பேச வேண்டாம் என்று கண்டித்தார். ஆனாலும், சுபாவேணி தொடர்ந்து, அந்த இளைஞரிடம் போனில் பேசி வந்துள்ளார்.. இதனால், தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது..
கோபம்: தன் விருப்பப்படி போனில் பேசவிடாததால், கணவரிடம் சண்டை போட்டுக் கொண்டு, சுபாவேணி தன்னுடைய அம்மா வீட்டுக்கு குழந்தையை தூக்கி கொண்டு வந்துவிட்டார்.. மனைவி மனம் மாறி வராததால், கருப்பசாமியும் கேரளாவுக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
மாரியப்பன், லட்சுமி, மகன்கள் வேல்முருகன், மகேஸ்வரன் இவர்களுடன் சுபா வேணியும் வந்து அம்மா வீட்டிலேயே தங்கிவிட்டார்.. ஊருக்கு அருகேயுள்ள ஒரு தோட்டத்தில் இவர்கள் வசித்து வந்தனர்.
அக்கா தம்பி: இந்நிலையில், சுபாவேணி நேற்றைய தினமும் செல்போனை எடுத்துக் கொண்டு, தனியாக நின்று பேச ஆரம்பித்துள்ளார். அந்த நேரம் பார்த்து, சுபாவேணியின் தம்பி மகேஸ்வரன் வந்துள்ளார்.. நீண்ட நேரமாக தன்னுடைய அக்கா போனில் பேசிக் கொண்டேயிருக்கவும், ஆத்திரம் வந்துள்ளது.
போனை கட் செய்யும்படி சொல்லியும், சுபா வேணி மணிக்கணக்கில் போனில் பேசிக் கொண்டேயிருந்தார்.. இதனால் உச்சக்கட்ட கோபம் அடைந்த மகேஸ்வரன், தோட்டத்திலிருந்த அரிவாளை எடுத்து வந்து, சுபாவேணியை சரமாரியாக வெட்டிவிட்டார்.. கழுத்து, தலை, நெற்றி என பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டுடன், ரத்த வெள்ளத்திலேயே அங்கேயே உயிரிழந்தார் சுபா வேணி.. துடிதுடித்து சுபாவேணியின் உயிர் போவதை பார்த்ததுமே மகேஸ்வரன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
சடலம்: இதற்கு பிறகு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்படவும், அவர்கள் விரைந்து வந்து தோட்டத்தில் விழுந்த கிடந்த சுபாவேணியின் சடலத்தை கைப்பற்றி நெல்லை மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.
கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு, சுபாவேணி தாய் வீட்டுக்கு வந்தது, யாருக்குமே பிடிக்கவில்லையாம். கணவருடன் சேர்ந்து வாழுமாறு தினமும் அறிவுறுத்தி வந்துள்ளார்கள்.. மேலும், கணவரின் உறவினருடன், நீண்ட நேரம் போனில் பேசக்கூடாது, அந்த பழக்கத்தை கைவிடுமாறும் கண்டித்து வந்துள்ளனர். இது தொடர்பாக, சுபாவேணியின் மீது அவரது தம்பிகளுக்கு கோபம் அதிகமாக இருந்து வந்துள்ளது.
ஆத்திரம்: நேற்றைய தினம் குளிக்க போவதாக சொல்லிவிட்டு, குழந்தையை தன்னுடைய அம்மா லட்சுமியிடம் தந்துவிட்டு, தோட்டத்துக்கு வந்துள்ளார் சுபா வேணி.. குளிக்க சென்ற மகள், நீண்ட நேரமாக திரும்பி வராததால், தோட்டத்துக்கே வந்து பார்த்துள்ளனர் லட்சுமியும், சுபாவேணியின் தம்பி மகேஸ்வரனும்..
அப்போதுதான், தென்னை மரத்தடியில் செல்போனில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து எரிச்சலடைந்திருக்கிறார்கள். மகேஸ்வரனுக்கு 16 வயதுதான் ஆகிறதாம். அக்கா நீண்ட நேரமாக போனில் பேசி கொண்டேயிருந்ததால், ஆத்திரம் தீராமல் வெட்டி சாய்த்துள்ளார்.. இறுதியில், தப்பியோடிய மகேஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர்...!
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications