என்னை வெளியே போகச் சொல்ல வளர்மதி யார்.. நிர்மலா பெரியசாமி கோபாவேசம்
கட்சியிலிருந்து என்னை வெளியே போகச்சொல்ல வளர்மதி யார் என்றும் அவர் விளாசியுள்ளார்.
சென்னை: அதிமுகவில் இருந்து என்னை வெளியேற சொல்ல வளர்மதி யார் என அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளரான வளர்மதி கேள்வி ஆவேசமாக கேட்டுள்ளார். வளர்மதியும், சிஆர்.சரஸ்வதியும் வியாதிகள் என்றும் அவர்க்ள விளாசியுள்ளார்.
சசிகலா தரப்பு அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. அப்போது நிர்மலா பெரியசாமிக்கும் முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிஆர்.சரஸ்வதி உள்ளிட்டோருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதையடுத்து நிர்மலா பெரியசாமி கூட்டத்திலிருந்து வெளியேறினார். இன்று புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தொலைப்பேசி வாயிலாக அவர் பேட்டியளித்தார். அப்போது வளர்மதியையும் சிஆர்.சரஸ்வதியைவும் வெளுத்து வாங்கினார்.

ஒருமையில் பேசிய வளர்மதி
முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தன்னை ஒருமையில் பேசியதாக குற்றம்சாட்டினார். ஒருமையில் பேசும் வேலையெல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதீர்கள் என்று நான் கூறியும் அவர் தொடர்ந்து ஒருமையில் பேசினார்.

வளர்மதி யார்?
என்னை கட்சியைவிட்டு வெளியே போ என்று வளர்மதி கூறியதாகவும் நிர்மலா பெரியசாமி கூறினார்.என்னை கட்சியிலிருந்து வெளியே போகச் சொல்ல வளர்மதி யார்? என்றும் நிர்மலா பெரியசாமி ஆவேசமாக கேட்டார். 40, 50 ஆண்டுகளாக கட்சியில் இருப்பதாக கூறி வளர்மதி தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் அவர் கூறினார்.

வளர்மதியும் சிஆர்.சரஸ்வதியும் வியாதிகள்
வளர்மதியும் சிஆர்.சரஸ்வதியும் வியாதிகள். இவர்களை போன்ற போலி அரசியல்வாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் போல் நடக்கவில்லை
வளர்மதி முன்னாள் அமைச்சர் போல் நடந்துக்கொள்ளவில்லை. அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாலும், ஒருமையில் பேசியதாலும் அங்கிருக்க முடியாமல் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினேன் என நிர்மலா பெரியசாமி தனது பேட்டியில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications