2 பெண்களை திருமணம் செய்த மதனுடன் திருப்பூரில் பதுங்கியிருந்த புதிய 'இளம் பெண்' யார்?
திருப்பூர்: 2 பெண்களை திருமணம் செய்த வேந்தர் மூவிஸ் மதனுடன் திருப்பூரில் பதுங்கியிருந்த பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி 110 மாணவர்களிடம் ரூ80 கோடி மோசடி செய்தார் என்பது மதன் மீதான புகார். ஆனால் மதனோ தாம் எஸ்ஆர்எம் குழும தலைவர் பச்சமுத்துவிடம் பணத்தை கொடுத்துவிட்டதாக ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு மாயமானார்.

கடந்த 7 மாதங்களாக மதன் எங்கிருக்கிறார் என தெரியாமல் இருந்தது. இதனிடையே மதனை மீட்கக் கோரியும் மதனிடம் இருந்து பணத்தை மீட்டுத் தரக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த நிலையில் திருப்பூரில் பெண் ஒருவருடன் பதுங்கி இருந்த மதன் கைது செய்யப்பட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மதனுக்கு ஏற்கனவே சிந்து, சுமலதா என்ற இரு மனைவிகள் உள்ளனர்.
மதன் மாயமான போது காசிவரை சென்று தேடியவர் சிந்து. சிந்துவுக்கும் சுமலதாவுக்கும் இடையே மதனின் சொத்துகள் தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த நிலையில் திருப்பூரில் ஒரு பெண்ணுடன் ரகசிய அறையில் மதன் பதுங்கி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளார். அப்படியானால் மதன் தப்பி ஓடும்போது 3-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாரா? அந்த பெண் யார்? அவர் மாணவியா? அந்த பெண்ணுடன்தான் 7 மாதம் ஊர் ஊராக சுற்றி தலைமறைவாக இருந்தாரா மதன்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications