போத்ரா மகள் கடத்தல்... சிசிடிவி காட்சிகளை வைத்து தேடும் போலீஸ்
சினிமா பைனான்சியர் போத்ராவின் மகள் மாயமான வழக்கில் தி. நகரில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சினிமா பைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா போத்ராவை கடத்தியது யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா தயாரிப்பாளர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வருபவர் போத்ரா. இவரது மகள் கரிஷ்மா போத்ராவை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை.

தி.நகரில் தங்கியிருந்த கரிஷ்மா கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தி.நகர் துணை ஆணையரிடம் போத்ரா புகார் அளித்துள்ளார்.
போத்ரா கந்துவட்டிக்கு பணம் கொடுத்து கைதானவர், அதனால் அவரது எதிரிகள் யாரும் கடத்தியிருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அருகில் இருந்த வீடுகளில் பதிவான சிசிடிவி வீடியோ காட்சிகளை பார்த்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications