ரவுடி பத்தர் செல்வம் கொலைக்கு பழியாக திமுக பிரமுகர் செல்வராஜ் படுகொலை?
விழுப்புரம்: ரவுடி கோஷ்டிகள் வெட்டி சாய்த்துக் கொள்வது என்பது விழுப்புரத்தில் தொடர் கதையாகி வருகிறது.. கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி பத்தர் செல்வம் கொலைக்கு பழியாகவே இன்று காலை வாக்கிங் போன திமுக நகர செயலர் செல்வராஜ் இன்று காலை வெட்டி கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மின்னல் ராஜா, ஆர்கே சிவா, புஷ்பராஜ், பத்தர் செல்வம்... விழுப்புரத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடிகள்...
இதில் ஆர்கேசிவாவின் தம்பி அறிவழகன்தான் கடந்த ஆண்டு பூங்கா ஒன்றில் விளையாடிவிட்டு திரும்பிய போது பத்தர் செல்வத்தை போட்டுத் தள்ளினார். அத்துடன் தலையை துண்டித்து 'காந்தி' சிலை முன்பாக வைத்து விட்டு போலீசில் சரணடைந்தார்.

மாமூல் கேட்டு மிரட்டல்
இருப்பினும் பத்தர் செல்வத்தின் கொலையின் போது திமுக நகரச் செயலர் செல்வராஜ் பெயரும் அடிபட்டது. செல்வராஜிடம் பெரும் தொகை ஒன்றை பத்தர் செல்வம் கேட்டு மிரட்டி வந்திருக்கிறார்.

செட்டில்மெண்ட்
ஆனால் செல்வராஜ் தர மறுத்து பத்தர் செல்வத்துக்கு பயந்து சில மாதம் தலைமறைவாகவும் இருந்திருக்கிறார். பின்னர் ஒருவழியாக 'சில பெருந்தலைகள்' முன்னிலையில் பத்தர் செல்வத்துக்கு கப்பம் கட்டினாராம் செல்வராஜ்.

அடுத்தடுத்து கொலைகள்
இந்த கோபத்தில்தான் பத்தர் செல்வத்தை அறிவழகனை வைத்து செல்வராஜ் போட்டிருக்கலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று செல்வராஜ் வாக்கிங் சென்ற போது வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

போலீஸ் விசாரணை
பத்தர்செல்வத்தின் படுகொலைக்கு பழிவாங்கவே செல்வராஜ் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications