பசிக்கிறது பணமில்லை என்று முழங்கிய ஸ்டாலின் கைதாகி விடுதலை
ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய பாஜக அரசின் அறிவிப்பை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் வெற்றி பெற்றதாக சட்டசபை எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: ரூ.500, 1000 செல்லாது என்ற மத்திய அரசு அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ராஜாஜி சாலையில் திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட ஸ்டாலின் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டார்.
பணமில்லை பணமில்லை ஏ.டி.எம்-ல் பணமில்லை, வங்கியில் பணமில்லை என்று ஸ்டாலின் கோஷமிட்டார். மோடி அரசும் சரியில்லை, ஜெயலலிதா அரசும் சரியில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் முழக்கமிட்டார்.

பணம் இருந்தும் பசிக்கிறது, நாடு முழுவதும் மக்கள் தவிக்கின்றனர் என்றும், வாழ விடு, வாழ விடு நாட்டு மக்களை வாழவிடு என்றும் ஸ்டாலின் கோஷமிட்டார். மேலும் மக்கள் பிரச்சனை தீரும் வரை போராடுவோம், மத்திய அரசை கண்டித்து போராடுவோம் என்றும் அவர் கூறினார். திருமணம் செய்ய பணமில்லை, மருந்து வாங்க பணமில்லை என்றும் ஸ்டாலினுடன் சேர்ந்து தொண்டர்களும் முழக்கமிட்டனர்.
ஆர்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின், மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் நாடு முழுவதும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது திமுகவினர் மட்டும் நடத்தும் போராட்டம் அல்ல. நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சியினர் ஒருங்கிணைந்து போராட்டம் செய்து வருகின்றனர். கடையடைப்பு, சாலை மறியல், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது ஒரு கட்சியினர் மட்டும் நடத்தும் அரசியல் போராட்டமல்ல நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டம் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மத்திய அரசைக்கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் இந்தியன் வங்கியை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை கைது செய்து அருகில் இருந்த மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மத்திய பாஜக அரசைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் வெற்றி பெற்றதாக கூறினார். மத்திய அரசு எந்த வித முன்னேற்றபாடும் செய்யாமல் பணம் செல்லாது என்று அறிவித்தாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications