பி.டி.அரசகுமார் மீது பாய்ந்த குண்டர் சட்டம் ஏன்? தேவரின வாக்குகளை திசை திருப்பியதாலா?

Subscribe to Oneindia Tamil

Why B T Arasakumar gets so many cases?
சென்னை: பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப் பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவ ரான பி.டி. அரசகுமார் குண்டர் சட்டத்தின் கீழ் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்திவந்த பி.டி. அரசகுமார் மீது, தனது கல்வி நிறுவனங்களில் பங்குதாரராகச் சேர்ந்தால் அதிகளவில் வருவாய் கிடைக்கும் எனக் கூறி, சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு, பணத்தை திருப்பிக் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சுமார் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு களில் பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

மாவட்டக் காவல் துறையின் பரிந்துரையின் பேரில், பி.டி. அரசகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் மனோகரன் உத்தரவிட்டார் .

10 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளில் அரசகுமாரை காவல்துறை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது அரசியல் பழிவாங்கல் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. அரசகுமார் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

பி.டி. அரசகுமாரும், எஸ். ஆர். தேவரும், அனைத்து சமுதாய பேரியக்கத்திலும், சமூக ஜனநாயக கூட்டணியிலும் தங்களை இணைத்துக் கொண்டு தீவிரமாக செயல்பட்டு வந்தனர். அனைத்து சமுதாய பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் அரசகுமார் பங்கேற்று தீவிரமாக செயல்பட்டு வந்தார். அடுத்ததாக பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான சமூக ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முழுவீச்சில் ஈடுபடவிருந்த நிலையில் துபாயில் நடந்த சமுதாய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி சென்னை திரும்பிய அரசகுமாரையும், அவரை வரவேற்க வந்த எஸ்.ஆர். தேவரையும் எப்போதோ போடப்பட்ட பொய் வழக்குகளில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

அனைத்து சமுதாய பேரியக்கம் தொடங்கி இருக்கும் மருத்துவர் ராமதாஸோடு, அரசகுமார் நெருக்கத்தில் இருந்தார். லோக்சபா தேர்தலில், தேவர் இன வாக்குகளை அ.தி.மு.க. பக்கம் இருந்து திருப்பும் முயற்சியில் ஈடுபட்டார். அதனால்தான் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+