தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஏன் அமல்படுத்த முடியாதாம்?: பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: குஜராத்தில் சாத்தியம் ஆகும்போது தமிழகத்தில் ஏன் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகி உயிரிழப்பு ஏற்படும் என்பதால் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அவரின் பேச்சுக்கு பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
குஜராத்தை போன்று தமிழகத்திலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். குஜராத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியிருக்கையில் தமிழகத்தில் மட்டும் ஏன் அதை அமல்படுத்த முடியாது?
நல்லவற்றை உதாரணமாக எடுத்துக் கொண்டு தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த முடியாது என்ற நத்தம் விஸ்வநாதனின் பேச்சு கண்டிக்கத்தக்கது என்றார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications