தொற்றிய டென்ஷன்.. "ஆடியோ".. டெல்லி பறக்கும் ஸ்டாலின் - எடப்பாடி - அண்ணாமலை - ஆர் என் ரவி.. ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த டாப் அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதனால் அடுத்த 3 - 4 நாட்களுக்கு தமிழ்நாடு அரசியல் பெரும் பரபரப்பாக இருக்க போகிறது.

தமிழ்நாட்டு அரசியலில் பிடிஆர் பேசுவதாக கூறப்படும் ஆடியோ புயலை கிளப்பி உள்ளது. கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ என்று ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது.

பல்வேறு விதமான விவாதங்களை இந்த ஆடியோ ஏற்படுத்தி உள்ளது. திமுகவினர் மீதே குற்றச்சாட்டு வைக்கும் விதமாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.

Why CM Stalin, Edappadi Palanisamy, Annamalai and RN Ravi suddenly travelling to Delhi?

இந்த ஆடியோவில் உண்மைத்தன்மை அறியப்படவில்லை. இந்த நிலையில் நேற்று இன்னொரு ஆடியோவும் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த இரண்டு ஆடியோக்களின் உண்மைத்தன்மை தெரியவில்லை. அமைச்சர் பிடிஆர் இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது, பொய்யானது என்று குறிப்பிட்டு இருந்தார்.

டெல்லி பயணம்:இந்த நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த டாப் அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி இன்று காலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு இன்று அதிகாலை ஆளுநர் புறப்பட்டார். அவர் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். நாளை மறுநாள் பயணம் முடித்துவிட்டு அவர் சென்னை திரும்ப உள்ளார். இந்த பயணத்தில் அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளார்.

முக்கியமான சில விவரங்களை, ஆட்சி தொடர்பான சில புகார்களை இவர் வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Why CM Stalin, Edappadi Palanisamy, Annamalai and RN Ravi suddenly travelling to Delhi?

எடப்பாடி பயணம்:இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி செல்ல உள்ளார். நேற்று அதிமுக (எடப்பாடி) வழக்கறிஞர் பாபுமுருகவேல், தமிழ்நாடு மற்றும் மத்திய விஜிலென்ஸ் துறைகளுக்கு நேற்று ஒரு புகார் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

அந்த கடிதத்தில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகவும், அந்த குரல் பதிவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் பெருமளவில் பணம் சேர்த்து விட்டதாகவும் கூறப்பட்ட ஆடியோவை பற்றி விலாவரியாக குற்றச்சாட்டுகளோடு குறிப்பிட்டு இருக்கிறாராம்.

முன்னதாக, ஆடியோ குறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். அதில் பிடிஆர் புகைப்படம் உள்ள ஆடியோ ஒன்றை ஒலிபரப்பி, இதோ இந்த ஆடியோவை.. இதை கேட்டுவிட்டு சொல்லுங்கள்.. இதை புனையப்பட்டதா.. உண்மையானதா.. போலியானதா என்பதை சொல்லுங்கள். இவரே பேசிவிட்டு.. இவரே பொய் என்று எப்படி சொல்ல முடியும். இதை ஆய்வு செய்ய வேண்டும்.

இது குறித்து ஆளுநரிடம் முறையிடுவோம். 2 வருடத்தில் இவர்கள் பெரிதாக கொள்ளையடித்துவிட்டனர். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய பணத்தை எல்லாம் கொள்ளையடித்துவிட்டனர். இதை பற்றி விசாரிக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம், என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். அவருக்கு கட்சி தொடர்பான சட்ட சிக்கல்கள் அனைத்தும் முடிந்துவிட்டால்.. டெல்லி பயணத்திற்கு காரணமே ஆடியோ விவகாரம்தான் என்று கூறப்படுகிறது.

Why CM Stalin, Edappadi Palanisamy, Annamalai and RN Ravi suddenly travelling to Delhi?

அண்ணாமலை டெல்லி பயணம்:

இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையும் டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். அவர் நாளைக்கு டெல்லிக்கு பயணம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பாகவும், தமிழ்நாடு அரசியல் விவகாரம் தொடர்பாகவும் இவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின்:இதையடுத்து முதல்வர் ஸ்டாலினும் நாளை இரவு டெல்லிக்கு செல்கிறார். சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர காலம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுக்க உள்ளார்.

சமீபத்தில் குடிமைப்பணி பயிற்சி பெற்றவர்கள் முன்னிலையில் பேசிய ஆளுநர் ஆர். என் ரவி, சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள். கிடப்பில் கிடந்தால் அந்த சட்டம் இறந்துவிட்டதாகவே பொருள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தனித்தீர்மானம் தாக்கல் செய்து அதை நிறைவேற்றினார்.

சட்டசபை மசோதாக்களை டெல்லிக்கு அனுப்ப கால நிர்ணயம் செய்தல், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவோடு இந்த தீர்மானம் வெற்றிபெற்றது. 144 உறுப்பினர்களிடம் ஆதரவோடு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சட்டசபை மசோதாக்களை டெல்லிக்கு அனுப்ப கால நிர்ணயம் செய்தல், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

Why CM Stalin, Edappadi Palanisamy, Annamalai and RN Ravi suddenly travelling to Delhi?

கடிதம்:இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பாஜக ஆளாத மாநில முதல்வர்களுக்கு இதே தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளார். பல்வேறு மாநில முதல்வர்கள் ஆளுநர் மீது கடுப்பில் உள்ள நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதி உள்ளார்.

தெலுங்கானாவில் தமிழிசை - கேசிஆர் இடையிலும், கேரளாவில் ஆரிப் கான் - பினராயி இடையிலும் என்று டெல்லி, பீகார், மேற்கு வங்கம் என்று பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் முதல்வர்களுக்கும் இடையில் மோதல் உள்ளது.

பாஜக ஆளாத மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் எல்லாம் ஆளுநருக்கும் - அரசுக்கும் கடும் மோதல் உள்ளது.

தெலுங்கானாவில் ஆளுநருக்கு எதிராக முதல்வர் கே சந்திரசேகர ராவ் வழக்கு போடும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+