எதுவும் தரலை... எதுவும் கிடைக்கலை... தீபக் பொசுக்கென பொங்கியது இதற்குதானாம்... பரபர பின்னணி
டிடிவி தினகரனுக்கு எதிராக தீபக் தீடீரென பொங்கியதற்கான பரபர காரணங்களை அடுக்குகிறது அதிமுக வட்டாரங்கள்.
சென்னை: அதிமுக துணைப் பொதுச்செயலராகிவிட்ட டிடிவி தினகரனுக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் திடீரென பொங்கி போர்க்கொடி தூக்கியதன் பின்னணி தொடர்பாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சசிகலா முகாமில் இருந்த தீபக் இன்று திடீரென முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளராகிவிட்டார். ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் பங்களா தங்களுக்கே சொந்தம்; ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் தேவை; டிடிவி தினகரன் தலைமையை ஏற்க முடியாது என்றெல்லாம் தீபக் பொங்கிவிட்டார்.
இது தொடர்பாக அதிமுக வட்டாரங்களில் நாம் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதே சசிகலா கட்டுப்பாட்டுக்குப் போனவர் தீபக்.

வாக்குறுதி கொடுத்த சசி
அவரை துணைக்கு வைத்துக் கொண்டு ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகளை சசிகலா செய்தார். சசிகலாவையும் அத்தை என்றே கூறி வந்தார். தீபக்குக்கு குறிப்பிட்ட தொகையும் கட்சிப் பதவியும் தரப்படும் என்பதுதான் முதலில் தரப்பட்ட வாக்குறுதி.

காத்திருப்பு
பின்னர் ஓபிஎஸ் விவகாரம் வெடித்தபோது முதல்வர் பஞ்சாயத்து முடியட்டும். காத்திருங்கள் என கூறப்பட்டதாம். சசிகலா சிறைக்குப் போகும் போது தமக்கு அதிமுகவின் இளைஞர் பாசறை செயலர் பதவியை தர வேண்டும் என நெருக்கடி கொடுத்திருக்கிறார். சசிகலாவும் பார்க்கலாம் என சொல்லிவிட்டார்.

தினகரன் எதிர்ப்பு
ஆனால் ஏற்கனவே முதல்வர் பதவி வேறு ஒருவரிடம் போய்விட்டது; கட்சிக்குள்ளும் இன்னொரு அதிகார மையம் வந்துவிடக் கூடாது; ஆகையால் தீபக்கை சேர்க்கவே வேண்டாம் என தினகரன் தான் முதலில் அடம்பிடித்தாராம். பதவி கேட்டு தீபக் அடம்பிடிக்க பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் இதை சொல்லியிருக்கிறார் தினகரன்.

திடீர் பொங்கல்
தீபக் ரொம்பவே முரண்டு பிடிப்பதால் சசிகலாவும் கட்சி பதவி உட்பட எதுவும் தர வேண்டியதில்லை என கறாராக சொல்லிவிட்டாராம். இந்த தகவல் சொல்லப்பட எதுவும் கிடைக்கலையே என தீபக் கடும் அதிருப்தி அடைந்தாராம். இதை தெரிந்து கொண்ட ஓபிஎஸ் டீம்தான் டியூன் செய்து தற்போது தீபக்கை பேச வைத்திருக்கிறது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications