சிங்கப்பூர் கிளம்பும் முன்.. திக்குமுக்காட வைத்த ஸ்டாலின்.. நடுங்கிய அதிகாரிகள்.. ஆ அப்போ உதயநிதி?
சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் கிளம்பிய நிலையில் நேற்று இரவு முக்கியமான சில ஆக்சன்களை எடுத்துள்ளார். அதிகாரிகள் இடையே அவரின் நடவடிக்கை பரபரப்பை கிளப்பி உள்ளது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜனவரி 2024-இல் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் இந்த பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பான பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். மு.க.ஸ்டாலின் மே 23ம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் பயணம் மேற்கொள்கிறார்.
மாற்றம்:முதல்வர் ஸ்டாலின் இப்படி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் முன் சரியாக முக்கிய அதிகாரிகளை மாற்றிவிட்டு சென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்று 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்
1.என்.சுப்பையன் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மேலாண் இயக்குநர் மற்றும் பால்வளத்துறை ஆணையர் பொறுப்பில் இருந்து தற்போது கூட்டுறவு சங்கப் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. திருப்பூர் ஆட்சியர் வினீத் மாற்றப்பட்டு உள்ளார். அவர் தற்போது பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மேலாண் இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.
3. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கே.செந்தில்ராஜ் மாற்றம் செய்யப்பட்டது நீக்கப்பட்டு உள்ளது. அவர் கூட்டுறவு சங்கப் பதிவாளராக நியமனம் செய்யப்பட்ட உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் தூத்துக்குடி ஆட்சியராகவே பணியில் தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டிருந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.ராகுல் நாத் செங்கல்பட்டு ஆட்சியராகவே தொடர்வார்.
5. தமிழ்நாடு ஃபைபர்நெட் கழக மேலாண்மை இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர் மாற்றுத்திறனாளிகள் நல மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
6. முதன்மை செயலாளராக இருந்து நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்ட உதயசந்திரன் கூடுதலாக தொல்லியல் துறையையும் கவனிப்பார்.
7. சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்தவர் ககன்தீப் சிங் பேடி. அவர் தற்போது சுகாதாரத் துறைச் செயலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு கூடுதலாக சிறப்பு திட்டம் செயலாக்கத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏன் மாற்றம்?:சரியாக சிங்கப்பூர் செல்லும் முன் முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளை இந்த மாற்றம் மூலம் வளரவிட்டு உள்ளார்.
முதல்வர் இங்கே இல்லாத போது பணிகள் சரியாக நடக்க வேண்டும் என்பதற்காக இந்த மாற்றங்களை செய்துள்ளார். நிர்வாக வசதிக்காக அவர் இந்த மாற்றங்களை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
முக்கியமாக உதயநிதி ஸ்டாலினின் சிறப்பு செயலாக்கத்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. அவரின் துறைக்கு மிக முக்கிய அதிகாரியான ககன் தீப் சிங் பேடி கொண்டு வரப்பட்டு உள்ளார். அவரின் வருகை காரணமாக இந்த துறை புதிய பொலிவு பெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

முக்கியமாக சென்னை மாநகராட்சி துறையில் அவர் சிறப்பாக பணிகளை செய்த நிலையில்தான் தற்போது அவர் சிறப்பு செயலாக்க துறைக்கு சென்றுள்ளார்.
கிட்டத்தட்ட இது சூப்பர் பவர் துறையாகும். இந்த துறையை வைத்து இருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. எந்த துறைக்கு கீழ் வேண்டுமானாலும் நலத்திட்டங்களை அறிவிக்க முடியும். உதாரணமாக கல்வித்துறை அமைச்சர் போக்குவரத்து துறையில் அறிவிப்புகளை வெளியிட முடியாது. ஆனால் இந்த சிறப்பு திட்ட செயலாக்க துறையை கையில் வைத்து இருக்கும் அமைச்சர் எந்த துறையில் வேண்டுமானாலும் சிறப்பு திட்டங்கள் என்ற பெயரில் அறிவிப்புகளை வெளியிட முடியும்.
பல்வேறு துறைகளில் தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. துறை ரீதியான அறிவிப்பு இல்லாமல், ஒவ்வொரு துறையிலும் சில சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும். முதல்வர்தான் இந்த சிறப்பு திட்டங்களை அறிவித்து வந்தார்.
அது உதயநிதி கைக்கு சென்ற நிலையில் தற்போது அதன் செயலாளராக ககன் தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டு உள்ளார். இதனால் உதயநிதிக்கு மவுசு கூடுகிறதோ என்ற பேச்சு கோட்டை வட்டாரங்களில் ஒலிக்க தொடங்கி உள்ளது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ!












Click it and Unblock the Notifications