Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேகுவேரா அன்று இந்தியா வந்தபோது இடதுசாரிகள் கண்டுகொள்ளாதது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேகுவேரா பற்றிய எத்தனையோ புத்தகங்கள் வந்திருக்கின்றன.. எத்தனையோ திரைப்படங்கள் வந்திருக்கின்றன.. அதுவும் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் மட்டுமே தேசிய இனம் மற்றும் புரட்சி என பேசுகிற முற்போக்கு முகாம்களின் முதுகுகள் சேகுவேராவின் டி சர்ட்டுகளை அணியாமல் இருந்தது இல்லை..

எங்கோ அர்ஜெண்டினாவில் பிறந்து மருத்துவராக வளர்ந்து பின்னர் காடுகளில் அலைந்து திரிந்து லத்தீன் அமெரிக்க தேசத்து நாடுகளின் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடி மரணித்துப் போன மாபெரும் போராளியாக இன்றும் உலகமே கொண்டாடக் கூடிய அதி அற்புதன்!

Why did Marxist Che Guevara visit India during 1959?

கியூபாவில் போராளியாகி அரசுப் பொறுப்பிலே அங்கம் வகித்து அதே கியூபாவைவிட்டு ரகசியமாக வெளியேறி காங்கோ நாட்டுப் புரட்சிக்காக, பொலிவியா புரட்சிக்காக களமாடிய மாவீரன்!

வரலாறு நெடுகிலும் இப்படித்தான் சே குவேராவைப் பற்றிய பதிவு இருக்கிறது,.

அந்த மாமனிதன் காலடிகள் 1959ஆம் ஆண்டில் இந்த இந்திய துணைக் கண்டத்திலும் பதிந்திருக்கிறது என்பதையே இந்த தலைமுறைக்கு 9 ஆண்டுகளுக்கு முன்புதான் ஓம் தன்வி என்ற எழுத்தாளர் அறிவித்தார்..

அதற்காக அவர் மேற்கொண்ட பயணம் அவ்வளவு நெடியது.. அதன் பின்னர் விக்கிலீக்ஸ் தகவல்களில் சேவின் இந்திய பயணக் குறிப்பு 2011-ம் ஆண்டு வெளியானது சரி

அதற்கும் இந்திய கம்யூனிஸ்டுகளுக்கும் என்ன தொடர்பு? என்கிறீர்களா?

டெல்லி வந்த சேகுவேரா அப்போதைய பிரதமர் ஜாஹர்லால் நேருவை சந்தித்துப் பேசினார். அவர் நேருவுக்கு பரிசாகக் கொடுத்தது கியூபா சிகரெட்டுகள்.. நேரு அப்போது அளித்த விருந்தில் இந்திரா குடும்பமும் கலந்து கொண்டது.

Why did Marxist Che Guevara visit India during 1959?

நேருவிடம் கம்யூனிஸ கியூபா பற்றியும் மா சேதுங் பற்றியும் சே குவேரா கேள்விகள் கேட்க...நேருவோ நேரடியாக பதிலளிக்காமல் ஆப்பிள் பழங்களைப் பற்றி பேசி இருந்திருக்கிறார்.

சேகுவேரா பற்றிய ஓம் தன்வியின் ஆதாரங்களுக்கு பேருதவியாக இருந்தவர் டெல்லி ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்த கே பி பானுமதி என்பவர்தான்!

அவர் சேகுவராவை பேட்டி எடுத்து ஒலி பரப்பியவர்!

அவரும் சேகுவேரா பற்றி நினைவுகளைப் பதிவு செய்கிறார்..அவர் போன முக்கியமான இடம் கொல்கத்தா!

ஆம் கம்யூனிஸ்டுகளின் கோட்டைக்குப் போனார்.. ஆனால் என்ன நடந்தது?

இந்தியா வருகை தந்த சேகுவேரா கம்யூனிஸ்டுகளின் கோட்டையான கொல்கத்தாவுக்கும் கூட போயிருக்கிறார். அப்போதைய முதல்வராக இருந்த பி.சி. ராயை சந்தித்துப் பேசியிருக்கிறார் என்றெல்லாம் சொல்லும் அந்தப் பதிவு ஒரு அதிர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.!

அப்போது கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கட்சியாக பிளவுபடாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியாகவே இருந்த காலம்!

எந்த ஒரு கம்யூனிஸ்ட் தலைவரையும் சே குவேரா சந்தித்ததாகவோ எந்த ஒரு குறிப்புமே இல்லை..

(Shockingly, the Calcutta communists - at a time when the Communist Party of India had not yet split - completely ignored the presence of this great leader of the Cuban revolution.)

ஓம் தன்வி சேகரித்து வெளியிட்ட புகைப்படங்களிலுமே கூட அப்படியான ஒரு காட்சி கூட இல்லை..

அதுமட்டுமல்ல..

சே குவேரா இந்தியா வந்து போன வரலாற்றை பதிவு செய்யக் கூடிய எந்த ஒரு நூலையும் அவரைக் கொண்டாடுகிற கம்யூனிஸ்ட் கட்சிகள் இதுவரை வெளியிட்டதாக தெரியவில்லை

அப்படியானால் சேகுவேராவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அன்று கொல்கத்தாவில் அவமதித்தனவா? அதை வரலாற்றுப் பக்க்கங்களில் மறைக்கின்றனவா?

பிடல் காஸ்ட்ரோவின் வரிகளில் சொல்வதானால் அந்த உண்மையை "வரலாறு விடுதலை செய்யும்"!

இன்று 'சே' எனும் சே குவேரா சுட்டுக் கொல்லப்பட்ட நாள் (09.10.1967)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+