நல்ல வார்த்தையா சொல்லுங்க.. ஸ்டாலின் அதிரடி ஆர்டர்! தலையை பிய்த்துக்கொள்ளும் அமைச்சர்கள்.. என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வரும் மே 7,8,9 ஆகிய 3 நாட்கள் 'திராவிட மாடல்' அரசின் 2 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்காக அமைச்சர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி நிறைவு பெற்றது. கிட்டத்தட்ட 40 நாட்கள் நடந்த பேரவை கூட்டத்தையொட்டி அமைச்சர்கள் டென்சனோடே இருந்தனர். ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ள அவர்களால் இயலவில்லை.

தினமும் அதிரடி விவாதம் காரணமாக அமைச்சர்கள் என்ன நடக்கும் என்று தெரியாமல் கடும் மன உளைச்சலில் இருந்தனர். முக்கியமாக மானியக்கோரிக்கை விவாதம் காரணமாக அமைச்சர்கள் பலரும் டென்சனில் இருந்தனர்.

இந்த நிலையில்தான் அமைச்சர்கள் எல்லோரும் புதிய டாஸ்க் ஒன்றை நினைத்து டென்ஷனில் இருக்கிறார்களாம்.

Why did Tamil Nadu ministers want to prove their achievements after the 2 years of DMK government completion?

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் வரும் மே 7,8,9 ஆகிய 3 நாட்கள் 'திராவிட மாடல்' அரசின் 2 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்காக அமைச்சர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

மொத்தம் 3 நாட்கள் திமுக சார்பில் பொதுக்கூட்டம் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 7- ந்தேதி, திமுக அரசு ஆட்சி கட்டிலில் அமர்ந்து 2 வருடங்கள் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி, திமுக அரசின் இரண்டாண்டு கால சாதனைகள் குறித்து விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சாதனைகளை கேச்சிங்கான வார்த்தைகளால் வசீகரம் செய்ய வார்த்தைகளைத் தேடி அதிகாரிகள் மண்டையை உடைத்து கொள்கிறார்களாம். அமைச்சர்கள் பலரும் தங்களின் துறை சார்ந்த சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல விளம்பரப்படுத்தும் ஆலோசனையை நடத்தி வருகிறார்கள்.

வரும் 7-8 தேதிகளில் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. 4 அமைச்சர்கள் வரை மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதில் பல விதமாக யூகங்களும் வட்டமடித்து வந்தன. அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இது போக இலாக்கா மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் பரவின. அதாவது சில அமைச்சர்களிடம் இருக்கும் இலாக்கா குறைக்கப்பட்டு அதில் புதிய அமைச்சர்கள் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

இளம் எம்எல்ஏக்களான டிஆர்பி ராஜா போன்றவர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில்தான் அமைச்சரவை மாற்றத்திற்கு முன்பாக 2 ஆண்டு ஆட்சி கொண்டாட்ட விழா நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான சாதனை பட்டியலில் தங்களின் துறைகளில் செய்யப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டு நல்ல பெயர் வாங்க அமைச்சர்கள் திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

Why did Tamil Nadu ministers want to prove their achievements after the 2 years of DMK government completion?

விடுமுறை:இந்த நிகழ்வுகள் எல்லாம் முடிந்த பின், வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க அமைச்சர்கள் பலரும் ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம், குலுமனாலி, சிம்லா என கோடைவாசஸ்தலம் சென்று வர திட்டமிட்டுள்ளனர்.

அமைச்சர்கள் பலரும் தங்களின் குடும்பத்தினருடன் கோடை வாசஸ்தலத்திற்கு சென்று வர முடிவு செய்துள்ளனர். இதற்காக முதல்வரிடம் அவர்கள் அனுமதி கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.

நாங்கள் மானியக்கோரிக்கைகளை சிறப்பாக முடித்துவிட்டோம். துறை ரீதியாக பல அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டோம். இனி இந்த அறிவிப்புகளை செயல்படுத்த மட்டுமே வேண்டும். அதை படிப்படியாக செய்து கொள்ள முடியும்.

இந்த நேரத்தில் நாங்கள் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விரும்புகிறோம். அதனால் சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்புகிறோம் என்று அமைச்சர்கள் முதல்வரிடம் கோரிக்கை வைக்க இருக்கிறார்களாம். திமுக அரசின் இரண்டு ஆண்டு கொண்டாட்டத்தை முடித்த பின் அமைச்சர்கள் சுற்றுலா செல்ல முதல்வர் ஸ்டாலின் அனுமதி கொடுத்து இருக்கிறாராம்.

ஒரு சில அமைச்சர்களை தவிர மற்ற அமைச்சர்கள் சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+