அனைவரும் எதிர்க்கும்போது நான் மட்டும் மோடியை ஆதரிப்பது ஏன்?: வைகோ பேட்டி
சென்னை: பொருளாதார மாணவன் என்பதால் இந்தியாவுக்கு மோடியின் திட்டம் தேவை என்று வரவேற்றிருக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,

நான் தான்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி இரவில் அறிவித்தபோது தமிழகத்திலேயே முதல் ஆளாக நான் தான் அவரின் நடவடிக்கையை வரவேற்றேன்.

வரவேற்பு
எனக்கு பிறகே மற்ற தலைவர்கள் மோடியின் அறிவிப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டார்கள். ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்டவர்கள் தற்போது எதிர்க்கிறார்கள்.

சிரமம்
மோடியின் அதிரடி நடவடிக்கையால் பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமத்திற்குள்ளாகியுள்ளது உண்மையே. 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை முன்கூட்டியே அச்சடித்திருந்தால் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு தகவல் கசிந்திருக்கும். அதனால் அமைச்சரவைக்கு கூட தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.இதை எதிர்த்து போராட்டம் நடத்துவது அவர்களின் உரிமை.

பொருளாதார மாணவன்
பிற கட்சிகளை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. பொருளாதார மாணவன் என்பதால் இந்தியாவுக்கு மோடியின் திட்டம் தேவை என்று வரவேற்றிருக்கிறேன்.

பாகிஸ்தான்
1967ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்கு நீர் அளிக்க முடியாது என்று மோடி கூறுவது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications