"வட்டம்".. படித்து படித்து சொன்ன அமித் ஷா.. வெளியே வந்ததும் வேலையை காட்டிய பாஜக.. அதிமுகவும் விடலையே
சென்னை: அதிமுக - பாஜக இடையிலான மோதலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு சமாதான பணிகளை மேற்கொண்டும் கூட மீண்டும் இரண்டு தரப்பும் மாறி மாறி மோதிக்கொண்டு உள்ளன.
இரண்டு நாட்களுக்கு முன் டெல்லியில் அண்ணாமலை - அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி இடையில் டெல்லியில் நடந்த மீட்டிங் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.
சுமார் 50 நிமிடங்கள் இவர்கள் நீண்ட ஆலோசனை மேற்கொண்டு இருக்கின்றனர். இந்த மீட்டிங்கிற்கு பின் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எங்களுக்கு எந்தவித தகராறும் இல்லை, என்று எடப்பாடி பழனிசாமி புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
டெல்லி பயணத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. அமித் ஷாவும் கூட்டணி உள்ளது என்பது உறுதியாகிவிட்டது. எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி உள்ளது என்று சொன்னது உறுதியாகிவிட்டது.

அதிமுக பாஜக இடையிலான மோதலை கருத்து வேறுபாட்டை அமித் ஷா தீர்த்து வைத்து இருக்கிறார். அண்ணாமலைக்கும் அங்கு வாய்பூட்டு போட்டு இருக்கிறார்கள்.
நம்ம கட்சி பற்றி எதை வேண்டுமானாலும் பேசு. என்ன வேண்டுமானாலும் சொல்லு. ஆனால் கூட்டணி கட்சி பற்றி பேசாதே என்று கூறி இருக்கிறார்கள். அதனால் அண்ணாமலை இனி பேச மாட்டார்.
இந்த மீட்டிங்கில் கூட்டணி இடங்கள், தொகுதிகள் குறித்தும் பேசி இருக்கிறார்கள். நாங்கள் வளர்ந்து இருக்கிறோம். நாங்கள் பெரிய ஆள் ஆகிவிட்டோம். அதனால் எங்களுக்கு அதிக இடங்கள் தேவை என்று பாஜக கேட்டுள்ளது.

ஆனால் நீங்கள் வளரவில்லை என்று அதிமுக சொல்லி உள்ளது. ஆனால் பாஜகவோ.. உங்கள் கட்சிக்கு உள்ளேயே மோதல் இருக்கிறது. உங்களுக்கு இடையிலேயே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றது. அப்படி இருக்க ஓபிஎஸ் வேறு இப்போது இல்லை.
இப்போதைக்கு கூட்டணி பற்றி பேச வேண்டாம்.. அதேபோல் அதிமுக - பாஜக மாறி மாறி பேசி மோதிக்கொண்டு இருக்க வேண்டாம். எல்லோருக்கும் வாய்ப்பூட்டு போடுங்க என்று அமித் ஷா உத்தரவிட்டு உள்ளார்.
அதிமுக - பாஜக இடையிலான மோதலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு சமாதான பணிகளை மேற்கொண்டும் கூட மீண்டும் இரண்டு தரப்பும் மாறி மாறி மோதிக்கொண்டு உள்ளன.
மோதல்:பாஜக மூத்த தலைவர் எஸ் ஆர் சேகர் இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், மத்தியில் 400 சீட்டுகளுக்கு மேல் பெற்று 3வது முறையாக வெற்றி பெறுவார் #மோடி என்ற கருத்துக்கணிப்புகள். இந்நிலையில் ஆறாக உடைந்து கவர்ச்சிகரமான தலைமையே இல்லாத #அதிமுக வுடன் 25 சீட் கொடுத்தாலே கூட்டணி .இல்லையேல் பாஜக தலைமையில் தனி கூட்டணி, என்று கூறி உள்ளார்.
அதாவது 25 இடங்களை எஸ் ஆர் சேகர் கேட்டு பெற்று இருக்கிறார்.
கூட்டணி பற்றி பேச வேண்டாம் என்று அமித் ஷா கூறிய நிலையில்தான்.. எஸ் ஆர் சேகர் கூட்டணி பற்றி பேசி இருக்கிறார். அவரின் இந்த கருத்துக்கள் சர்ச்சையாகி உள்ளன.

அதிமுக பதிலடி:இதற்கு அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அதில், அதிமுகவை விமர்சிப்பவர்களை அண்ணாமலை தடுக்க வேண்டும்
திமுக குறித்து விமர்சனம் செய்யும் பாஜக நிர்வாகிகளை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டிக்க வேண்டும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; நாங்களும் எதிர்வினை ஆற்றுவோம், என்று ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக - பாஜக இடையிலான மோதலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு சமாதான பணிகளை மேற்கொண்டும் கூட மீண்டும் இரண்டு தரப்பும் மாறி மாறி மோதிக்கொண்டு உள்ளன. வாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள்.. அரசியலும் ஒரு வட்டம்தான் என்பதை நிரூபித்து.. சண்டையில் தொடங்கி சமாதானத்திற்கு சென்று மீண்டும் சண்டைக்கே வட்டமடித்து திரும்பி வந்துள்ளது அதிமுக - பாஜக உறவு.












Click it and Unblock the Notifications