டிக்டிக்.. கோட்டையில் அடிக்கும் மணி.. ஸ்டாலின் போடும் அதிரடி பிளான்.. மொத்தமாக எல்லாம் மாற போகுதாம்
சென்னை: தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் சமீபத்தில் நடந்த நிலையில்.. வரும் வார இறுதியில் முக்கியமான வேறு சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 1 வாரமாக முதல்வர் ஸ்டாலின் சிங்க பாதையில் சென்று கொண்டு இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள், நன்றாக செயல்படும் அமைச்சர்கள் என்று கூட பார்க்காமல் சில அதிரடி மாற்றங்களை சமீபத்தில் அவர் மேற்கொண்டார்.

அமைச்சரவை மாற்றம்:தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்துள்ளார். மேலும் ஐடி துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.
அதேபோல் அமைச்சர் சாமிநாதன் தமிழ் வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
அதிகாரிகள் மாற்றம்:இதையடுத்து பல்வேறு துறை செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். தனக்கு நெருக்கமான அதிகாரி உதயசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்டோரை கூட ஸ்டாலின் மாற்றினார். அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதும் எதிர்பார்த்தது போலவே உயர் அதிகாரிகள் மாற்றமும் நடந்தது.

அதன்படி முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக மாற்றம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
கருப்பு ஆடு:தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் சமீபத்தில் நடந்த நிலையில்.. வரும் வார இறுதியில் முக்கியமான வேறு சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் மாற்றப்பட உள்ளனர். பல பிரிவுகளின் டாப் அதிகாரிகள், மாவட்ட எஸ்பிக்கள் என்று பலர் மாற்றம் செய்யப்பட உள்ளனர்.

சிலர் காவல்துறையில் இருந்து கொண்டு எதிர்கட்சிக்கும், கட்சிக்கு எதிராக பேசும் சிலருக்கும் முன்கூட்டியே தகவல்களை அனுப்பி வருகிறார்களாம். அதிலும் சில டாப் சீக்ரெட் தகவல்களை கூட அதிகாரிகள் பகிர்ந்து வருகிறார்களாம்.
இதனால் சில முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்ற முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். இதனால் கோட்டையே கொஞ்சம் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பதவிக்காலம் முடிய உள்ளது.. லஞ்ச ஒழிப்புத்துறை கந்தசாமி ஐபிஎஸ் பதவிக்காலம் முடிந்துவிட்டது.
இவர்களுக்கு மாற்று அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அதேபோல் 2024 லோக்சபா தேர்தலுக்காக புதிய நம்பிக்கையான போலீஸ் அதிகாரிகளை உயர் பொறுப்புகளில் நியமிக்க வேண்டும். இது போக அடுத்து மாவட்ட ஆட்சியர்கள் பலர் மாற்றப்பட உள்ளனர். அதன்பின் ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் மாற்றப்பட உள்ளனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications