ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் சசிகலா ஆதரவாளராக மாறியது இதற்குத்தானாம்!
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், சசிகலாவின் ஆதரவாளராக மாறியதற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது.
சென்னை: காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பார்க்க அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வந்தாலும் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை.
ஜெயலலிதாவிற்கு ரத்த சொந்தம் என்கிற வகையில் அவரது அண்ணன் மகள் தீபா, அத்தையைப் பார்க்க பகீரத முயற்சி எடுத்தும் அவருக்கு மருத்துவமனையின் வரவேற்பறையை கடந்து அனுமதிக்கிடைக்கவில்லை. பார்த்தவர்களைப் பார்க்கக்கூட அனுமதி மறுக்கப்பட்டது.
இந்தச் சூழலில்தான் தீபாவின் சகோதரர் தீபக்கை தங்களது பிடியில் சசிகலா வைத்திருப்பதாக அதிமுகவின் மேல்மட்டத்தில் தகவல் உலாவியது. சசிகலாவுக்கு எதிராக தீபா, மீண்டும் வாய்த்திறந்தால் அவரது அண்ணன் தீபக்கை வைத்து பதிலடித்தருவதற்காகவே அவரை வளைத்து வைத்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியானது. ஜெயலலிதாவின் உடல்நலத்தின் உண்மைத்தன்மையை அறிந்துள்ள தீபக்கும் சசிகலா தரப்பின் ஆதரவாளராக மாறிப்போனார் என்றும் நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் செய்தி வெளியானது.

ஜெயலலிதா அண்ணன் மகன்
சசிகலா கஸ்டடிக்கு தீபக் சென்றது ஏன் என்று இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 16ம் தேதி தமிழகம் முழுக்க ஒரே நேரத்தில் அதிமுகவினர் கோயில்களில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினார்கள். மிகப்பெரிய யாகமும் நடைபெற்றது. இதற்கும் தீபக்கிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இந்த பூஜைகள் எல்லாமே ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று நடத்தப்பட்டதுதான்.

சிறப்பு சிகிச்சை
அக்டோபர் 18ஆம் தேதி, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்திருக்கிறார்கள். 5 நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 23ஆம் தேதியன்று காலை ஜெயலலிதாவுக்கு முக்கியமான சிகிச்சை ஒன்று நடந்திருக்கிறது. சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை மருத்துவர்கள் ஆலோசனையின்படி அந்த சிகிச்சையை நடைபெற்றதாகவும் அதனால்தான் அன்று, எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதாம்.

ஒரே நேரத்தில் பூஜை
தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்தனர். மயிலாப்பூரில் அமைந்துள்ள முண்டகக்கண்ணியம்மன் கோயிலில், அம்மனுக்கு ஆயிரத்து எட்டு பால்குட அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. மைசூரில் உள்ள ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வமான சாமுண்டீஸ்வரிக்கு சிறப்பு பூஜையும் நேர்த்திக்கடனும் செலுத்தப்பட்டது. எல்லாம் மருத்துவமனையில் இருந்து சசிகலா உத்தரவிட்டதன் அடிப்படையிலேயே நடைபெற்றது.

மத்திய அரசுக்கு தெரியும்
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், சசிகலாவின் கஸ்டடிக்கு வந்ததுக்கும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்
சிகிச்சை தொடர்பான விபரங்களை மத்திய அரசுக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றனர்.

அமைதியான தீபா
இந்த சிகிச்சைக்குப் பிறகு, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிவிட்டாராம். இதை எல்லாம் அறிந்துதான் தற்போது எதுவும் பேசாமல் தீபாவும் சைலண்ட் மோடுக்கு மாறிவிட்டார் என்கின்றனர். முன்பு மருத்துவமனைக்கு வந்து செய்தியாளர்களிடம் வந்து பரபரப்பாக பேட்டி அளித்தவர் இப்போது எதையுமே பேசுவதில்லை.

நள்ளிரவு பூஜை
உயர்சிகிச்சை நடைபெற்று ஒருமாதம் கழித்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நள்ளிரவு சிறப்பு பூஜை நடத்தியிருக்கின்றனர். இதன்பிறகே நேற்று அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி முதல்வரைப் பற்றி மிக முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்தார். முதல்வர் பூரண குணம் அடைந்து விட்டார். பிசியோதெரபி சிகிச்சையால் ஜெயலலிதா இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா பேசுகிறார்
முதல்வரின் அனைத்து உறுப்புகளும் நல்ல நிலையில் செயல்படுகிறது. உபகரணங்கள் மூலம் பேசுகிறார். மூச்சுக்குழாய் சிகிச்சை அவருக்கு தரப்படுகிறது. சில நாட்கள்தான் இது அவருக்கு தேவைப்படும். அவர் இயல்புநிலைக்கு திரும்புகிறார். அவர் விரும்பும் போது, எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம். மன வலிமை மிக்க முதல்வர் விரைவாக குணம் அடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார் பிரதாப் ரெட்டி

தொடரும் பூஜைகள்
ஜெயலலிதா பேசுகிறார் என்று பிரதாப் ரெட்டி கூறினாலும், அவர் இனி எழுந்து நடக்க வேண்டியதுதான் பாக்கி என்று கூறியுள்ளார். இதன் மூலம் ஜெயலலிதா 2 மாதமாக பேசவில்லை,படுத்த படுக்கையாக இருக்கிறார் என்பது வெளியாகியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் பிரார்த்தனையை தொடர்ந்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications