அம்மாவின் 'குட் புக்'கில் அசைக்க முடியாத இடம்பிடித்த சின்னையா வீழ்ந்த கதை!
சென்னை : நம்பிக்கையானவர், நேர்மையானவர், தேர்தல் செலவுக்கு கொடுத்த பணத்தை கூட பைசா பாக்கியில்லாமல் திருப்பி கொண்டு வந்து கொடுத்து அம்மாவின் 'குட்புக்'கில் இடம் பிடித்தவர் சின்னையா. இதனாலேயே அமைச்சர் பதவியில் 5 ஆண்டுகாலம் அசைக்கமுடியாமல் இருந்தார். இதெல்லாம் நேற்று பிற்பகல் வரைக்கும்தான். இப்போது அவர் மாஜி அமைச்சர்.
கட்சியில் கம்பீரமாக வலம் வந்த சின்னையாவை திடீரென்று கட்சிப்பதவியில் இருந்து நீக்கியதோடு அமைச்சர் பதவியையும் பறித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. காரணம் இவர் ஓ.பி.எஸ் ஆதரவாளர் என்பதால்தானாம்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரது ஆதரவாளர்கள் கட்சி தலைமைக்கு தெரியாமல், உள்குத்து வேலைகளில் ஈடுபட்டது உளவுத்துறை மூலம் தெரியவரவே அவர்களை அடுத்தடுத்து களையெடுத்து வருகிறார் ஜெயலலிதா.
சட்டசபை தேர்தலில் சீட் கேட்டு பல கோடி பணத்தை ஓ.பி.எஸ் குடும்ப உறவினர்கள், பினாமிகள் வசம் கொடுத்தது தெரியவரவே, கோபம் கொண்ட ஜெயலலிதா, அடுத்தடுத்து ஒவ்வொரு காயாக வெட்டி வருகிறார்.
இதில் வெட்டப்பட்ட ஒருவர்தான் அமைச்சர் சின்னையா. நேற்று பிற்பகல் வரை அமைச்சராக வலம் வந்தவர், மதியத்திற்கு மேல் சாதாரண காரில் தனது வீட்டிற்கு திரும்பினார். இவரது அமைச்சர் பதவி பறிபோக காரணம் கட்டப்பஞ்சாயத்து, பணம் வசூல் என்பதோடு, கூடவே இவர் ஓ.பி.எஸ் ஆதரவாளர் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.
யார் இந்த சின்னையா? எப்படி திடீரென்று அமைச்சரானர்? என்று விசாரித்தால் பழையை கதையை கூறுகின்றனர் காஞ்சிபுரம் பகுதி அதிமுகவினர். தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. இருக்கும் சின்னையா தனது மாமா மூலம்தான் அதிமுகவிற்குள் அடி எடுத்து வைத்துள்ளார் இவரது மாமா முனுஆதி, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது, சபாநாயகராக இருந்தார்.
இந்த முனு ஆதியின் அக்கா மகன்தான் டி.கே.எம். சின்னையா. மாமாவின் சிபாரிசில், பெருங்களத்துாரில் இருந்த, ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனியில் பயிற்றுனராக சேர்ந்து பின், அ.தி.மு.க.வில் இணைந்தார் சின்னையா. கவுன்சிலர் சின்னையா மாமாவிடம் இருந்து விலகி, எம்.எல்.ஏ.ராஜமாணிக்கத்திடம் அடைக்கலம் புகுந்தார். தாம்பரம் நகராட்சி, 11வது வார்டு துணைத் தலைவர் பதவி, நகராட்சி கவுன்சிலர் என, படிப்படியாக உயர்ந்தார்.
மாவட்டச் செயலாளராக இருந்த சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் எம்.பி.யிடம் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவரும் கட்சியில் சீனியர் என்ற முறையில் சின்னையா பெயரோடு மூவர் பெயரை தலைமைக்கு அனுப்பி வைத்தார். அதில் கடைசியாக இருந்த பெயரான டி.கே.எம்.சின்னையாவை வேட்பாளராக தேர்வு செய்தார் ஜெயலலிதா.
2011 தேர்தலில், தாம்பரம் தொகுதியில் போட்டியிட்ட போது தேர்தல் செலவுக்கு கட்சி கொடுத்த பணத்தில் செலவிட்டது போக, எஞ்சியதை அப்படியே கொண்டுபோய் ஜெயலலிதாவிடம் கொடுத்து அவரது மனதில் இடம்பிடித்து அமைச்சரவையிலும் அசைக்க முடியாத அமைச்சராக இடம் பெற்றார்.
முதலில், சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்ற சின்னையா பின்னர், கால்நடைத்துறை அமைச்சரானார். அமைச்சரான பின், இவர் அதிக சொத்து சேர்த்து விட்டதாகவும், அந்த பணத்தில், அவரது அண்ணன் திரைப்படம் தயாரிப்பதாகவும் புகார் எழுந்தது.
கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு, கொலை மிரட்டல் விடுப்பதாக, சரவணன் என்பவர் புகார் செய்தார். குவிந்த புகார்கள் பல்வேறு புகார் எழுந்தபோதும், அமைச்சரவை பல முறை மாற்றி அமைக்கப்பட்டபோதும், பதவியை இழக்காமல் இருந்த சின்னையாவின் பதவி, ஆட்சி முடியும் தருவாயில் பறிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கால்நடைத்துறையில் 42 உதவி பேராசிரியர்கள் பணியிடத்துக்கு பணம் வாங்கிய புகார், தாம்பரம் பெண் கோட்டாட்சியர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
வெள்ள நிவாரணத்துக்காக வழங்கப்பட்ட உதவி பொருட்கள், கடந்த மாதம் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளுக்கு வழங்கிய பணத்தை சுருட்டினார் என்பது சின்னையா மீதான புகாராகும். தாம்பரம் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பில் ராகவேந்திரா கோயில் கட்டுவதாக வசூல் வேட்டை நடத்தியது, கட்டப்பஞ்சாயத்து, எம்எல்ஏ சீட் வாங்கி தருகிறேன் என்று பலரிடம் பணம் வாங்கியுள்ளார் என்றும் சின்னையா மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
பல்வேறு புகார் எழுந்தபோதும், அமைச்சரவை பல முறை மாற்றி அமைக்கப்பட்டபோதும், பதவியை இழக்காமல் இருந்த சின்னையாவின் பதவி, ஆட்சி முடியும் தருவாயில் பறிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இவர் ஓ.பி.எஸ்க்கு மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். அவரிடம் கேட்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாராம்.
இப்போது ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் வரிசையாக களையெடுக்கப்பட்டு வரும் நிலையில், சின்னையாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அடிக்கிற காத்துக்கு ஆலமரமே பறக்கிறப்ப அம்மிக்கல்லு எம்மாத்திரம் என்கின்றனர் அதிமுகவினர்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications