ஓபிஎஸ்சுக்கு உதவியதன் பின்னணியில் நிர்மலா சீதாராமனின் செம பிளான்- டிடிவி தினகரன் பரபரப்பு தகவல்
Recommended Video

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தம்பிக்கு ராணுவத்தின் ஏர் ஆம்புலன்ஸ்சை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்து உதவியதன் பின்னணியில் ஒரு பெரிய நோக்கம் இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: ஒரு ராணுவ அமைச்சர், அதிலும் ஒரு பெண் முதன் முதலாக ராணுவ அமைச்சராக இருந்தவர் என்பதால் பெருமைப்பட்டோம்.
தமிழ் பேசுகிறவர். ஆனால் அவரே இப்படி செய்துள்ளார். இந்திய மக்கள் இதை கவனித்து வருகிறார்கள். மக்களை முட்டார்கள் என்று நினைத்தால் தேர்தலில் அது எதிரொலிக்கும்.

முதல்வராக திட்டம்
இதைவிட பெரிய காமெடி என்னவென்றால், நிர்மலா சீதாராமன்தான், தமிழக முதல்வர் வேட்பாளராக திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. அதனால் தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதற்காக, முதல்வராக வேண்டும் என்பதற்காகத்தான், பன்னீர் செல்வத்திற்கு உதவிகள் செய்துள்ளார். 2 விஷயம் இதில் தெரிகிறது. 'அமைதிப்படை' பன்னீர்செல்வம் மிஸ்டர் க்ளீன், பெரிய தலைவர் என்றெல்லாம் நீங்கள் (மீடியா) எடுத்து காட்டினீர்கள். பன்னீர்செல்வம் பாஜக சேவகர் போல மாறியதால்தான், ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, முதல்வராக இருந்த அவரை, மாற்ற வேண்டியதாயிற்று.

சோஷியல் மீடியா அட்டாக்
சோஷியல் மீடியாவில் அப்போது பன்னீர்செல்வத்தை தேவதூதர் போல போக்கஸ் செய்தனர். ஆனால் பன்னீர்செல்வம் ஒன்றும் இல்லை என்பது எனக்கு தெரியும். இன்று அது வெளிப்பட்டுள்ளது. அதே சோஷியல் மீடியா இன்று பன்னீர் செல்வத்தை அட்டாக் செய்கிறது. நிர்மலா சீதாராமனை அவர் காட்டி கொடுத்துவிட்டார் என கூறுகிறார்கள். தன்னை முதல்வராக்கியவர்களையே காட்டி கொடுத்தவர், இவர்களை காட்டி கொடுக்க எவ்வளவு நேரம் ஆகும். என்னை காப்பாற்ற யாருக்கும் துரோகம் செய்வேன் என்பதுதான் அவர் இயல்பு.

ஜெ. மரணத்தை கொச்சைப்படுத்தியவர்
இது தெரியாமல் அரிச்சந்திரன், காந்தி பேரன், தியாகி போலவெல்லாம் அவரை போகஸ் செய்தனர். தெய்வம், தெய்வம் என்று யாரை கூறினாரோ அவர் மரணத்தையே கொச்சைப்படுத்தியவர் ஓபிஎஸ். விசாரணை கமிஷன் அமைக்க காரணமாக இருந்தவர். அவர் செய்த பாவங்கள் அவரை விடாது. இன்னும் தொடரும்.

வேற லெவல்ங்க
எங்களுக்கு 6 சதவீத வாக்கு இருப்பதாக பாண்டே தனது கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளார். இந்த கருத்து திணிப்பெல்லாம் சரியில்லை. இதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். ஏற்கனவே ஆர்.கே.நகரில் அவர்களுக்கு அனுபவம் இருந்தும், தைரியமாக இப்படி சொல்கிறார்கள். 234 தொகுதிகளில் எங்கள் உறுப்பினர் சேர்க்கையே 30ஆயிரம் 40 ஆயிரம் தாண்டிவிட்டது. சில தொகுதிகளில் 70,000த்தை தாண்டிவிட்டது. ஆனால் எங்களுக்கு வாக்கு வங்கி குறைவாக இருப்பதாக கருத்து திணிப்பில் காட்டுகிறார்கள். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications