மூக்குத்தியில் என்ன பிரச்சினை உங்களுக்கு??.. குமுறும் மக்கள்
Recommended Video

சென்னை: சிபிஎஸ்இ அதிகாரிகளின் முட்டாள்தனமான உத்தரவுகள் மக்களை கடுமையாக கொதிக்க வைத்துள்ளன. இந்த விவகாரத்தில் குமரி முதல் டெல்லி வரை மக்களிடையே பெரும் எரிச்சலையே ஏற்படுத்தியுள்ளது நீட் தேர்வறை அதிகாரிகளின் செயல்பாடுகள்.
ஏதோ ஹிட்லர் காலத்து சித்திரவதைக் கூடம் போலவே காட்சி தந்தது நீட் தேர்வறை சோதனைக் காட்சிகள்.
ஒருவர் மூக்குத்தியைப் பிடுங்குகிறார். ஒருவர் காதுக்குள் டார்ச் அடித்துப் பார்க்கிறார். ஒருவர், மாணவியின் டிரஸ்ஸை லூசாக்கி காட்டச் சொல்கிறார். என்ன கொடுமை இது?. கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலிக்கு அனுமதி கிடையாது. அட, சாமிக்கு நேர்ந்து போட்ட பாசி மணி மாலையைக் கூட கழற்றி விட்டார்கள்.

இது சாதாரண பரீட்சைதானே
மக்களிடையே இந்த செயல்பாடுகள் மிகவும் எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சாதாரண பரீட்சைக்கு ஏன் இந்த அக்கப் போர். அந்த அளவுக்கா சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு மூளை மழுங்கிப் போய் விட்டது.

மூக்குத்தியை ஏன் பறிக்கிறீர்கள்
இதில் கொடுமை என்னவென்றால் மாணவிகளின் மூக்குத்தியைக் கூட விடாமல் பிடுங்கியதுதான். ஒரு தந்தை தனது மகளின் மூக்குத்தியைக் கழற்ற முடியாமல் சிரமப்பட்ட காட்சி பெரும் பரிதாபமாக இருந்தது. பின்னர் அந்த மாணவியே போராடி அதை கழற்றி அப்பாவின் கையில் கொடுத்து விட்டு பரபரப்பாக உள்ளே போனார்.

கொடூரர்களாக மாறிய தேர்வறை அலுவலர்கள்
கிட்டத்தட்ட கொடூரர்களாக மாறி விட்டனர் நேற்றைய தேர்வு மைய அதிகாரிகள். வாசலிலேயே நிற்க வைத்து சோதனையிட்டது. காது கம்மலை கழற்றச் சொன்னது. மூக்குத்தியைப் பிடுங்கி விட்டது. தலைமுடியை கலைத்து அலங்கோலமாக்கியது. நினைக்கவே படு கடுப்பாக இருக்கிறது சிபிஎஸ்இயின் புத்திசாலித்தனம்.

எந்த மடையரின் யோசனையோ
மூக்குத்தியில் பிட் அடிக்க முடியும் என்ற எந்த மடையர் கூறிய யோசனை என்று தெரியவில்லை. மூக்குத்திக்குள் எப்படிப்பா பிட் வைத்து அடிக்க முடியும். என்ன மாதிரியான புத்திசாலித்தனம் இது? மக்கள் என்ன சொன்னாலும் செய்ய வேண்டும், என்ன விதிமுறை போட்டாலும் ஏற்க வேண்டும் என்று அடி முட்டாள்தனம் மட்டுமல்ல, சர்வாதிகாரமும் கூட.
தேர்வுகளை நடத்துவது எப்படி என்பதை தமிழகத்திற்கு வந்து டெல்லி சிபிஎஸ்இ அதிகாரிகள் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையே இந்த அரைகுறை வேலைகள் மீண்டும் நிரூபித்துள்ளன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications